இந்தியா

சகோதரன் மீது 8 முறை டிராக்டர் ஏற்றிய கொடூரம் : நிலத்தகராறு பிரச்னையில் கொலை - வெளியான அதிர்ச்சி வீடியோ !

நிலத்தகராறு காரணமாக சகோதரன் மீது 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சகோதரன் மீது 8 முறை டிராக்டர் ஏற்றிய கொடூரம் : நிலத்தகராறு  பிரச்னையில் கொலை - வெளியான அதிர்ச்சி வீடியோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரைச் சேர்ந்த சகோதரர்கள் பகதூர் சிங், அதர் சிங். இவர்களின் பூர்விக நிலம் ஒன்று அந்த கிராமத்தில் இருந்துள்ளது. இந்த நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் பகதூர் சிங், அதர் சிங் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்தது.

இருவரும் அந்த நிலத்தை தங்களுக்கு சொந்தம் எனக் கூறி வருவதால் அந்த நிலத்தை யாரும் பயன்படுத்தாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை, பகதூர் சிங் தனது குடும்பத்துடன் அந்த நிலத்துக்கு டிராக்டரை எடுத்து வந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த அதர் சிங்கும் தனது குடும்பத்தோடு அங்கு வந்து பகதூர் சிங்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பகதூர் சிங்கின் மகன் தாமோதர் சிங், அதர் சிங்கின் மகனும், தனது ஒன்று விட்ட சகோதரருமான நிர்பத் சிங் மீது டிராக்டரை ஏற்றியுள்ளார்.

ஒருமுறையோடு நிற்காத அவர், தொடர்ந்து 8 முறை நிர்பத் சிங் மீது டிராக்டரை ஏற்றி, ஏற்றி இறக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த நிர்பத் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சண்டையில் இரு தரப்பிலும்10 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து வழக்கு பதிவு செய்த போலீசார், 4 பேரைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories