இந்தியா

பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு இருந்த இளம் பெண் உடல் : டெல்லியை அதிரவைத்த கொலை சம்பவம்!

டெல்லியில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு இருந்த இளம் பெண் உடல் : டெல்லியை அதிரவைத்த கொலை சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கு டெல்லியில் உள்ள திலக் நபர் பகுதியில் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் இருந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பிறகு அங்கு வந்த போலிஸார், அவர்களது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர். இவரை குர்பிரீத் சிங் என்ற வாலிபர் சுவிட்சர்லாந்தில் சந்தித்துள்ளார். பின்னவர் இருவரும் பழகிவந்துள்ளனர்.

இதையடுத்து இந்த பெண்ணுக்கு வேறொருவருடன் பழக்கம் இருந்துள்ளது. இதனால் குர்பிரீத் சிங் அப்பெண்ணைக் கொலை செய்யத் திட்டம் போட்டுள்ளார். அதன்படி அவரை இந்தியா வரவைத்துள்ளார். பிறகு அவரை தனி அறையில் அடைத்து, கை,கால்களை கட்டிப்போட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

பிறகு பழைய கார் ஒன்றை வாங்கி அதில் அவரது உடலை மறைத்து வைத்துள்ளார். ஆனால் உடல் அழுகி துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் உடலைச் சாலையில் வீசி சென்றது விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து குர்பிரீத் சிங்கை போலிஸார் கைது செய்து அவரது வீட்டிலிருந்து ரூ.2.25 கோடியை பறிமுதல் செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories