இந்தியா

“நாங்கள் மீண்டும் வருவோம்..”: உச்சநீதிமன்றம் முன் மோதிரம் மாற்றிக்கொண்ட தன்பாலின ஜோடி - குவியும் வாழ்த்து

தன்பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்க முடியாது என நேற்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் முன் நின்று மோதிரத்தை தன்பாலின ஜோடி மாற்றிக்கொண்டுள்ளனர்.

“நாங்கள் மீண்டும் வருவோம்..”: உச்சநீதிமன்றம் முன் மோதிரம் மாற்றிக்கொண்ட தன்பாலின ஜோடி - குவியும் வாழ்த்து
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாகவே மனிதர்கள் பிறக்கும்போது ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். ஆனால் நாம் வளரும்போது நமக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தின் காரணமாக நமது விருப்பங்கள் மாறுபடுகிறது. ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீதும் மட்டுமே ஈர்ப்பு வர வேண்டும்; இதுவே உலக நியதி; இயற்கை என்றெல்லாம் நமக்கு சிலர் கூறியிருப்பர். ஆனால் அதையும் மீறி சிலருக்கு மாற்றங்கள் ஏற்படும்.

அதாவது ஆணாக இருக்கும் ஒருவருக்கு ஆண் மீதும், பெண்ணாக இருக்கும் ஒருவருக்கு பெண் மீதும் ஈர்ப்பு வருகிறது. இதனை தான் தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்று அழைப்பர். இதனை ஆங்கிலத்தில் லேசபியன், கே என்றெல்லாம் அழைப்பர். காதல் என்றால் அது ஆண், பெண் காதலிப்பதுதான் என்று நமக்கு எல்லாம் கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலகம் தோன்றிய காலத்திலிருந்தே தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதலும் இங்கே நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

“நாங்கள் மீண்டும் வருவோம்..”: உச்சநீதிமன்றம் முன் மோதிரம் மாற்றிக்கொண்ட தன்பாலின ஜோடி - குவியும் வாழ்த்து

ஆரம்ப காலத்தில் பெற்றோர்களின் விருப்பங்கள் காரணமாக இதுபோன்ற மாற்றங்களை பலரும் மறைத்து வாழ்ந்து வந்துள்ளனர். காலம் போக போக இதனை எதிர்த்து போராட வேண்டிய சூழலில் சிலர் தள்ளப்பட்டனர். ஜூன் 28, 1969 அன்று நியூயார்க்கில் நடைபெற்ற தாக்குதலுக்கு எதிராக ஸ்டோன்வீலில் தன்பாலின சேர்க்கை சமுதாய உறுப்பினர்களின் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களாக இருந்தன. இந்தக் கிளர்ச்சி ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. அதுவே பின்னாளில், அமெரிக்காவில் உள்ள தன்பாலின விடுதலை இயக்கத்திற்கு வழிவகுத்தது. இதனால் தன்பாலின சேர்க்கை சமூகத்தினர் ஜூன் மாதத்தைப் பெருமையான மாதமாகக் கருதுகின்றனர்.

தற்போதுள்ள காலத்திலும் கூட தன்பாலின ஈர்ப்பாளர்களில் பலரால், தங்கள் காதலை பொதுவெளியில் அறிவிக்க முடியாத நிலை உள்ளது. இப்போதும் கூட இவர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். இந்த சூழலில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை சட்ட அங்கீகாரமாக மாற்ற வேண்டும் என்றும், தன்பாலின திருமணம் அங்கீகாரம் இல்லாததால் அரசின் திட்டங்களைப் பெறுவது உள்ளிட்ட பல உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.

“நாங்கள் மீண்டும் வருவோம்..”: உச்சநீதிமன்றம் முன் மோதிரம் மாற்றிக்கொண்ட தன்பாலின ஜோடி - குவியும் வாழ்த்து

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று 5 நீதிபதிகளின் அமர்வுக்கு வந்தது. தொடர்ந்து இதனை விசாரித்த 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்தாலும், அவர்களுக்கு திருமண உரிமை வழங்க 5 நீதிபதிகளும் மறுப்பு தெரிவித்துள்ளனர். நீதிபதிகளின் இந்த தீர்ப்பு தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தன்பாலின ஈர்ப்பாளர் ஜோடி ஒன்று, உச்சநீதிமன்றத்தின் முன் நின்று மோதிரம் மாற்றிக்கொண்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது அனன்யா கோட்டியா (Ananya Kotia) என்ற நபர் ஒருவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் (பொருளாதாரம்) பிஎச்டி மாணவராக இருக்கிறார். இவர்தான் தற்போது தனது துணைக்கு மோதிரம் மாற்றியுள்ளார்.

“நாங்கள் மீண்டும் வருவோம்..”: உச்சநீதிமன்றம் முன் மோதிரம் மாற்றிக்கொண்ட தன்பாலின ஜோடி - குவியும் வாழ்த்து

அனன்யா கோட்டியாவின் ஜோடி உட்கார்ஷ் சக்செனா (Utkarsh Saxena) ஒரு வழக்கறிஞர் ஆவார். அனன்யா கோட்டியாவும், உட்கார்ஷ் சக்செனாவும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தின் முன் நின்று மோதிரம் மாற்றி நிச்சயம் செய்துகொண்டுள்ளனர். இவர்களுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அனன்யா கோட்டியா, பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், "நேற்று வலித்தது. இன்று, எங்கள் உரிமைகளை மறுத்த நீதிமன்றத்திற்கு திரும்பிச் சென்று எனது துணையான உட்கார்ஷ் சக்செனாவுடன் மோதிரங்களை மாற்றிக்கொண்டேன். இந்த வாரம் சட்ட இழப்பைப் பற்றியது அல்ல; எங்கள் நிச்சயதார்த்தம் பற்றியது. எங்கள் உரிமையை மீட்டெடுக்க மீண்டும் வருவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories