இந்தியா

”நாடாளுமன்ற தேர்தல் பீதியில் பாஜக” : ராகுல் காந்தியை ராவணனுடன் ஒப்பிட்ட போஸ்டருக்கு காங்கிரஸ் பதிலடி!

"ராகுல் காந்தியை ராவணனுடன் ஒப்பிட்டு புகைப்படம் வெளியிட்டுள்ள பா.ஜ.க நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கே.சி.வேணுகோபால் வலியுறுத்தியுள்ளார்.

”நாடாளுமன்ற தேர்தல் பீதியில் பாஜக” : ராகுல் காந்தியை ராவணனுடன் ஒப்பிட்ட போஸ்டருக்கு காங்கிரஸ் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விரைவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் நடக்க இருக்கிறது. இதனால் அனைத்து கட்சிகளுமே தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

மேலும் தேர்தலில் தொகுதி உடன்பாடு செய்வது குறித்தும் விவாதித்து முடிவெடுத்துள்ளனர். அதோடு 5 மாநில தேர்தலிலும் இந்தியா கூட்டணி இணைந்து போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பா.ஜ.கவுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியாக ராகுல் காந்தியை பப்பு என்று சொல்லிவந்த பா.ஜ.க தற்போது அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதே இல்லை. ஒற்றுமை நடைப பயணத்தின் மூலம் இந்தியாவின் நம்பிக்கை பெற்ற தலைவராக தற்போது உயர்ந்துள்ளார் ராகுல் காந்தி. இதனால் தான் அவரை நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கமும் பா.ஜ.க செய்தது.

”நாடாளுமன்ற தேர்தல் பீதியில் பாஜக” : ராகுல் காந்தியை ராவணனுடன் ஒப்பிட்ட போஸ்டருக்கு காங்கிரஸ் பதிலடி!

இப்படி அவரது பெயரைக் கெடுக்கும் வகையில் பா.ஜ.க தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ராகுல் காந்தியைப் பல தலைகள் கொண்ட ராவணனாகச் சித்தரித்து சமூக ஊடகங்களில் பா.ஜ.க போஸ்டர் ஒன்று வெளியிட்டுள்ளது. இதற்குக் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், ராகுல் காந்தியை ராவணனுடன் ஒப்பிட்டு புகைப்படம் வெளியிட்டுள்ள பா.ஜ.க நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வலியுறுத்தியுள்ளார். மேலும் நாடாளுமன்றத் தேர்தலைப் பார்த்து பா.ஜ.கவின் அச்சத்தையும், பீதியையுமே இது வெளிப்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், வன்முறை மற்றும் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலான போஸ்டர்கள் உங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வருவதை ஏற்றுக் கொள்கிறீர்களா? என பிரியங்கா காந்தி பா.ஜ.க தலைமைக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories