இந்தியா

”சமூக ஊடகங்கள் பயன்பாட்டிற்கு தடை விதித்தால் தேசம் பாதுகாக்கப்படும்"..கர்நாடக உயர் நீதிமன்றம் பரிந்துரை!

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதித்தால் தேசம் பாதுகாக்கப்படும் என ஒன்றிய அரசுக்குக் கர்நாடக உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

”சமூக ஊடகங்கள் பயன்பாட்டிற்கு தடை விதித்தால் தேசம் பாதுகாக்கப்படும்"..கர்நாடக உயர் நீதிமன்றம் பரிந்துரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் ட்விட்டுகள் மற்றும் கணக்குகள் தடுக்கும் இந்திய அரசின் உத்தரவு தொடர்பான வழக்கில் X Corp மேல்முறையீட்டு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி. நரேந்தர் மற்றும் விஜய்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு வந்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள், சமூக ஊடகங்களால் இன்று பள்ளி செல்லும் குழந்தைகள் அடிமையாகிவிட்டனர். எனவே குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதைத் தடை செய்தால் தேசம் பாதுகாக்கப்படும்.

மேலும் சமூக ஊடகம் பயன்படுத்துவதற்கு வயது வரம்பு கொண்டு வர வேண்டும். இது நாட்டிற்கு நல்லதா? கெட்டதா என்பதைத் தீர்மானிக்கும் பக்குவம் குழந்தைகளுக்கு இருக்கிறதா? குறைந்த பட்சம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் வயது 21 ஆக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஒன்றிய அரசுக்கும் நீதிபதிகள் வாய்மொழியாகப் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் கர்நாடக நீதிமன்றத்தின் தனிநபர் நீதிபதி உத்தரவுக்கு உரிய நேரத்தில் பதில் கொடுக்க தவறியதாக X Corp நிறுவனம் ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories