இந்தியா

இன்னும் 15 நாட்கள் தான் இருக்கு.. ₹2000 நோட்டுகள் வைத்திருப்போர் கவனத்திற்கு-RBI கொடுக்கும் எச்சரிக்கை !

ரூ.2000 நோட்டுகள் மாற்றுவதற்கான காலக்கெடு வரும் செப்டெம்பர் 30ம் தேதி நிறைவடையவுள்ளது.

இன்னும் 15 நாட்கள் தான் இருக்கு.. ₹2000 நோட்டுகள் வைத்திருப்போர் கவனத்திற்கு-RBI கொடுக்கும் எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் முதல் ரூ.2000 நோட்டுகள் செல்லுபடி ஆகாது என்று ரிசர்வ் வங்கி கடந்த மே 19-ம் தேதி இரவு அதிரடியாக அறிவித்திருந்தது. இதையடுத்து இதற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்களிடம் இருந்து பெரும் கண்டனங்கள் குவிந்தது. இந்த சூழலில் இந்த கேடு இந்த மாதத்தோடு நிறைவடையவுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு ஊழலை ஒழிப்பதாக கூறி, இரவோடு இரவாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி, தங்களிடம் இருந்த பணத்தை ஏடிஎம்., வங்கி என வரிசையாக நின்று, சாப்பிடாமல் கூட மாற்றிக்கொண்டனர். இந்த நிகழ்வால் பொதுமக்கள் பலவகையில் துன்பங்களை அனுபவித்தனர்.

இன்னும் 15 நாட்கள் தான் இருக்கு.. ₹2000 நோட்டுகள் வைத்திருப்போர் கவனத்திற்கு-RBI கொடுக்கும் எச்சரிக்கை !

இதன் தொடர்ச்சியாக புது ரூ.500 நோட்டுகளும், ரூ.2000 நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரை இந்த ரூபாய் நோட்டுகள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி இந்த நோட்டுகளை திரும்ப பெறப்போவதாக கடந்த மே மாதம் அறிவித்தது.

அதன்படி பொதுமக்களுக்கு ஏதுவாக இருக்க பல்வேறு அறிவிப்புகள் விதிக்கப்பட்டது. அதாவது, தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வரும் மே 23 முதல் செப்டம்பர் 30 வரை வங்ககளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும், நாள் ஒன்றுக்கு ஒரு நபர் ரூ.20,000 மதிப்பிலான ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இன்னும் 15 நாட்கள் தான் இருக்கு.. ₹2000 நோட்டுகள் வைத்திருப்போர் கவனத்திற்கு-RBI கொடுக்கும் எச்சரிக்கை !

மேலும் ரூ.2000 நோட்டுகள் இனிமேல் புதிதாக புழக்கத்துக்கு வராது என்றும், ஏற்கனவே அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட நோட்டுகள் செல்லும் என்றும் தெரிவித்தது. இந்த சூழலில் இந்த அறிவிப்புக்கு மக்கள், எதிர்க்கட்சிகள் என பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். இருப்பினும் இதனை RBI திரும்ப பெறவில்லை. எனவே மக்களும் தங்களிடம் இருந்த ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரிசெர்வ் வங்கி கொடுத்த கால அவகாசம் வரும் செப்டெம்பர் 30-ம் தேதியோடு நிறைவடைகிறது. செப்டெம்பர் 30-ம் தேதி வர இன்னும் 15 நாட்களே இருக்கும் நிலையில், யாரிடமாவது ரூ.2000 நோட்டுகள் இருந்தால், அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். மேலும் தங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் வைத்திருந்தால் கூட, அவர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.

banner

Related Stories

Related Stories