இந்தியா

உ.பி : செருப்பால் அடித்து சித்திரவதை.. குழந்தைகள் காப்பகத்தில் கொடுமை.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி !

குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை அங்கிருக்கும் கண்காணிப்பாளர் செருப்பால் அடித்து சித்தரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி : செருப்பால் அடித்து சித்திரவதை.. குழந்தைகள் காப்பகத்தில் கொடுமை..  வீடியோ வெளியாகி அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ளது ராஜ்கியா பால் கிரஹ (Rajkiya Baal Grah) என்ற பகுதி. இங்கு குழந்தைகள் நலக்காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் ஆதரவற்ற குழந்தைகள் இருந்து வருகின்றனர். அவர்களை கவனித்துக்கொள்ள பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அங்கு பெண் கண்காணிப்பாளர்கள் குழந்தைகளை கவனித்து வருகின்றனர்.

உ.பி : செருப்பால் அடித்து சித்திரவதை.. குழந்தைகள் காப்பகத்தில் கொடுமை..  வீடியோ வெளியாகி அதிர்ச்சி !

இந்த சூழலில் அங்கிருக்கும் பெண் கண்காணிப்பாளர் பூனம் பால் என்பவர் குழந்தைகளை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனங்களை எழுப்பி வருகிறது. கடந்த 4-ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த வீடியோவில், ஒரே அறையில் 6-7 குழந்தைகள் உள்ளனர். படுக்கைகளில் இருக்கும் அந்த குழந்தைகளில் சிலர் பேரின் கை, கால்கள் கட்டப்பட்டுள்ளது.

அப்போது ஒரு படுக்கையில் இருக்கும் குழந்தையை இந்த பெண் கண்காணிப்பாளர் தனது செருப்பை கொண்டு அடிக்கிறார். அவருடன் சேர்ந்து மற்ற கண்காணிப்பாளர்களும் அதே அறையில் இருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு கிடைக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த அவர்கள், அந்த காப்பகத்தை சோதனை செய்தனர்.

உ.பி : செருப்பால் அடித்து சித்திரவதை.. குழந்தைகள் காப்பகத்தில் கொடுமை..  வீடியோ வெளியாகி அதிர்ச்சி !

அப்போது இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி கிடைத்தது. அதனடிப்படையில் பெண் கண்காணிப்பாளர் பூனம் பாலை விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு தற்போது பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

குற்றம்சாட்டப்பட்ட பெண் கண்காணிப்பாளர் ஏற்கனவே பிரயாக்ராஜில் உள்ள சிறார் காப்பகத்தில் இதுபோன்ற ஒரு சம்பவத்தில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது. குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை அங்கிருக்கும் கண்காணிப்பாளர் செருப்பால் அடித்து சித்தரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories