இந்தியா

அமர்ந்து படிக்க இருக்கை கூட இல்லை.. கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை அடித்து நொறுக்கிய மாணவிகள்!

பீகாரில் அரசுப் பள்ளி ஒன்றில் அடிப்படை வசதிகள் செய்யப்படாததைக் கண்டித்து கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை மாணவிகள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

அமர்ந்து படிக்க இருக்கை கூட இல்லை.. கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை அடித்து நொறுக்கிய மாணவிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் படிக்க இருக்கை வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகள் பல முறை புகார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த பள்ளி மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து கல்வித்துறை அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

அப்போது ஆவேசத்துடன் இருந்த மாணவிகள் கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை மறித்துத் தடுத்து நிறுத்தினர். பின்னர் சாலையிலிருந்து கற்கள் மற்றும் கட்டைகளைக் கொண்டு அடித்து நொறுக்கினர். பின்னர் போலிஸார் மாணவிகளைச் சமாதானப்படுத்தி அவர்களை அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories