இந்தியா

”எதற்காக சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்? ”... பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சோனியா காந்தி!

இந்தியாவின் 9 முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கோரி பிரதமர் மோடிக்குச் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

”எதற்காக சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்? ”... பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சோனியா காந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியைச் சிதைக்கும் வகையில் 'ஒரே நாடு -ஒரே தேர்தல்' திட்டத்தைக் கொண்டுவருவதில் வெகு மும்முரமாக இருந்து வருகிறது.

மேலும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆய்வு நடத்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதேபோல் இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றுவதற்கான முயற்சியிலும் பா.ஜ.க வேகமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த இரண்டையும் நடைமுறைப் படுத்தும் விதமாக வரும் 18ம் தேதி சிறப்பு நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறது. ஒருவாரம் நடைபெறும் இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் எது குறித்து விவாதம் நடைபெற உள்ளது என்பது குறித்து இன்னும் உறுப்பினர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளது ஒன்றிய அரசு.

”எதற்காக சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்? ”... பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சோனியா காந்தி!

ஒன்றிய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு இந்தியா கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சிறப்பு நாடாளுமன்றம் குறித்தும் நேற்று இந்தியா கூட்டணி தலைவர்கள் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் 9 முக்கிய பிரச்சனைகளை முன்வைத்து விவாதம் நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்குச் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "செப்டம்பர் 18ம் தேதி முதல் 5 நாள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட்டியுள்ளீர்கள். எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள் இல்லாமல் இந்த சிறப்பு அமர்வு கூட்டப்படுகிறது. மேலும் இதன் நிகழ்ச்சி நிரல் பற்றியும் யாருக்கும் தெரிவிக்கவில்லை. ஐந்து நாட்கள் நாடாளுமன்றம் நடைபெறும் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்கிறோம். ஏனென்றால் இது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை விவாதிக்க வாய்ப்பளிக்கும். மேலும் இந்தியாவின் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும்.

”எதற்காக சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்? ”... பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சோனியா காந்தி!

1. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வளர்ந்து வரும் வேலையில்லா திண்டாட்டம், தற்போதைய பொருளாதார நிலைமை.

2. விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் எழுப்பிய கோரிக்கைகள் தொடர்பாக இந்திய அரசு உறுதியளித்தல்.

3. அதானி முறைகேடு குறித்து ஜே.சி.பி விசாரணை

4. தொடர்ந்து நீடித்து வரும் மணிப்பூர் வன்முறை.

5.ஹரியானா போன்ற பல்வேறு மாநிலங்களில் வகுப்புவாத பதற்றம் அதிகரிப்பு.

6. இந்திய எல்லைப்பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு. லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் எல்லைகளில் உள்ள சவால்கள்.

7. ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசரத் தேவை.

8. ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளில் ஏற்படும் பாதிப்புகள்.

9. இயற்கை பேரழிவுகளின் தாக்கம்.

இந்த முக்கிய பிரச்சனைகள் குறித்து சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதம் நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories