இந்தியா

”பிரதமர் மோடி, பாஜக, அதானி ஊழைலை இந்தியா கூட்டணி நிரூபிக்கும்”.. ராகுல் காந்தி எம்.பி திட்டவட்டம்!

மோடி அதானி ஊழைலை இந்தியா கூட்டணி நிரூபிக்கும் என ராகுல் காந்தி எம்.பி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

”பிரதமர் மோடி, பாஜக, அதானி ஊழைலை இந்தியா கூட்டணி நிரூபிக்கும்”.. ராகுல் காந்தி எம்.பி திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. மேலும் தேர்தலுக்கான வியூகத்தையும் வகுத்து வருகின்றனர். இவர்களின் முதல் வெற்றியாக தங்களது கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் "இந்தியா" என வைத்துள்ளது பா.ஜ.கவிற்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடித்தே தீரவேண்டும் என்ற ஒரே கருத்துடன் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது பா.ஜ.கவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் முதல் இரண்டு கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், மும்பையில் நேற்று "இந்தியா" கூட்டணியின் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் நாடாளுமுன்ற தேர்தலில் முடிந்தவரை ஒன்றாக போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் தொகுதி பங்கீடுகளை உடனே தொடங்குவது என்றும், மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடந்து என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

”பிரதமர் மோடி, பாஜக, அதானி ஊழைலை இந்தியா கூட்டணி நிரூபிக்கும்”.. ராகுல் காந்தி எம்.பி திட்டவட்டம்!

பின்னர் இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, "இந்தியா கூட்டணி இந்திய மக்கள் தொகையில் 60% பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நாங்கள் ஒன்றிணைந்து உள்ளதால் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறுவது சாத்தியமில்லை.

இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்புக்குழு உள்ளிட்ட ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்படும் முடிவுகளை நிறைவேற்றுவோம். பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதானிக்கும் உள்ள தொடர்பு ஒவ்வொரு நபருக்கும் தெரியும். பிரதமரும பா.ஜ.கவின் ஊழல் பிணைப்புகளை இந்தியா கூட்டணி நிரூபிக்கும்.

ஏழை எளிய மக்களிடம் இருந்து பணத்தை பிரித்து அதை குறிப்பிட்ட சிலருக்கு மாற்ற வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் யோசனைகளாக உள்ளது. ஆனால் நாங்கள் ஏழை மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர்களை மீட்பதற்காக ஒன்றாக இணைந்துள்ளோம். இந்தியா கூட்டணி பா.ஜ.கவை தோற்கடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

”பிரதமர் மோடி, பாஜக, அதானி ஊழைலை இந்தியா கூட்டணி நிரூபிக்கும்”.. ராகுல் காந்தி எம்.பி திட்டவட்டம்!

நான் ஒரு வாரம் லடாக்கில் சுற்றுபயணம் செய்தேன். அப்போது சீன பகுதி எல்லை அருகே உள்ள பாங்காங் சோ எரிக்கு சென்று அங்குள்ள லடாக் மக்களிடம் பேசினேன். அவர்கள் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக திட்டவட்டமாக என்னிடம் கூறினார்கள். பிரதமர்மோடி பொய் சொல்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் இப்பிரச்சனைகளை பற்றி பத்திரிகைகள் பெரிதாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. லடாக்கில் என்ன நடக்கிறது என்பதை மோடி சொல்ல வேண்டும்" என தெரிவித்தள்ளார்.

banner

Related Stories

Related Stories