இந்தியா

”நரேந்திர மோடியை இந்தியா கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கும்”.. ராகுல் காந்தி MP உறுதி!

நாடாளுமன்ற தேர்தலில் மோடியை இந்தியா கூட்டணி தோற்கடிப்பது நிச்சயம் என ராகுல் காந்தி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

”நரேந்திர மோடியை இந்தியா கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கும்”.. ராகுல் காந்தி MP உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. மேலும் தேர்தலுக்கான வியூகத்தையும் வகுத்து வருகின்றனர். இவர்களின் முதல் வெற்றியாக தங்களது கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் "இந்தியா" என வைத்துள்ளது பா.ஜ.கவிற்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடித்தே தீரவேண்டும் என்ற ஒரே கருத்துடன் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது பா.ஜ.கவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் முதல் இரண்டு கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், மும்பையில் நேற்று "இந்தியா" கூட்டணியின் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் நாடாளுமுன்ற தேர்தலில் முடிந்தவரை ஒன்றாக போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் தொகுதி பங்கீடுகளை உடனே தொடங்குவது என்றும், மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடந்து என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

”நரேந்திர மோடியை இந்தியா கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கும்”.. ராகுல் காந்தி MP உறுதி!

பின்னர் இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்தியா கூட்டணிக்கு 14 பேர்கள் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்தியா கூட்டணி சார்பில் பிரச்சாரக்குழு, சமூக வலைதள, ஊடகக்குழு செயல்பாட்டுக்குழு உள்ளிட்ட 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

ராகுல் காந்தி: "நாடாளுமன்ற தேர்தலில் மோடியை இந்தியா கூட்டணி தோற்கடிப்பது நிச்சயம். இந்தியாவின் நம்பகத்தன்மையை காப்பாற்ற பிரதமர் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். ஏழை மக்களிடம் இருந்து பணத்தை பறித்து குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்கு வழங்குவதே மோடி அரசின் இலக்கு. சுமூகமான முறையில் தொகுதிப் பங்கீட்டை நடத்தி முடிப்போம்."

உத்தவ் தாக்ரே : "இந்தியா கூட்டணி வெற்றி கூட்டணி. இந்தியாவின் விரோதி யாரென்று உங்களுக்கு தெரியும். நாங்கள் தனிப்பட்ட கூட்டணி அல்ல நாங்கள் இந்திய குடும்பம்."

நிதிஷ் குமார் : "இந்தியா கூட்டணி தகர்ந்துவிடும் என நினைத்த மோடியின் கனவு தகர்ந்துவிட்டது. இந்தியாவை பிரிக்க நினைக்கும் பா.ஜ.கவின் திட்டம் நிறைவேறாது."

”நரேந்திர மோடியை இந்தியா கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கும்”.. ராகுல் காந்தி MP உறுதி!

அரவிந்த் கெஜ்ரிவால்: "இது வெறும் 28 கட்சிகளின் கூட்டணி அல்ல, 140 கோடி மக்களின் கூட்டணி . சுதந்திர இந்திய வரலாற்றிலேயே மோடி அரசு தான் ஊழல் மற்றும் திமிர் பிடித்த அரசாக இருக்கிறது. இந்தியா கூட்டணியில் இருக்கும் யாரும் பதவி பெற வரவில்லை, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஒன்றாக இணைந்து இருக்கிறோம்."

சீதாராம் யெச்சூரி: "இந்தியா கூட்டணியில் வளர்ச்சியால் மோடி அரசு அச்சமடைந்துள்ளது. இந்த கூட்டத்தின் அடித்தகட்டமாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். கூடுதல் கட்சிகள் இந்தியா கூட்டணியின் இணைய உள்ளது."

banner

Related Stories

Related Stories