இந்தியா

நிர்வாணமாக ஓடவைத்து ராகிங்.. கொடுமை தாங்கமுடியாமல் மாணவர் தற்கொலை.. வங்கத்தை உலுக்கிய கொடூரம் !

நிர்வாணமாக ஓடவைத்து ராகிங் கொடுமை செய்யப்பட்டதால் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நிர்வாணமாக ஓடவைத்து ராகிங்.. கொடுமை தாங்கமுடியாமல் மாணவர்  தற்கொலை.. வங்கத்தை உலுக்கிய கொடூரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணவர்களிடம் நட்பாக பழகவும், அவர்களை கல்லூரி வாழ்க்கைக்கு சகஜமாகவும் எப்போதோ ஆரம்பிக்கப்பட்டதுதான் ராகிங் கலாச்சாரம்.. ஆனால் தற்போது அதன் நோக்கமே சிதைக்கப்பட்டு புதிதாக சேரும் மாணவர்களை கொடுமை படுத்தும் நிகழ்வாக அது மாற்றப்பட்டுள்ளது.

சில மோசமான ராகிங் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவும் நிலைமை மோசமாகியுள்ளது. அந்த வகையில் மேற்குவங்கத்தில் ஒரு மாணவர் ராகிங்கால் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு பயின்று வந்த மாணவர் பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த விடுதியில் சீனியர் மாணவர்கள் இந்த மாணவரை தொடர்ந்து ராகிங் செய்து வந்துள்ளனர்.

நிர்வாணமாக ஓடவைத்து ராகிங்.. கொடுமை தாங்கமுடியாமல் மாணவர்  தற்கொலை.. வங்கத்தை உலுக்கிய கொடூரம் !

இந்த நிலையில், தொடர்ந்த ராகிங் கொடுமையால் கடந்த 9-ம் தேதி அந்த மாணவர் விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அந்த மாணவர் நிர்வாணமாக நடக்கவைத்த கொடூரமாக செயல்கள் வெளிவந்துள்ளது.

விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட மாணவரை, சிலர் நிர்வாணமாக்கி நடந்து வரக் கட்டாயப்படுத்தியதாகவும், அவரை ஓரினசேர்கையாளர் எனக் கூறி கிண்டல் செய்ததும் தெரியவந்துள்ளது. இது தவிர நிர்வாணமாக அந்த மாணவரை விடுதியின் பல்வேறு அறைகளுக்கு ஓடவிட்ட சம்பவமும் நடைபெற்றவுள்ளது. அதனைத் தொடர்ந்தே மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவத்தில் இதுவரை 13 பேரைக் கைதுசெய்துள்ளதாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories