இந்தியா

மக்களுக்கு ஒரு நியாயம் பாஜக MPக்கு ஒரு நியாயமா?.. ரூ.56 கோடி ஏல அறிவிப்பை திரும்பப் பெற்ற வங்கி!

24 மணி நேரத்தில் பா.ஜ.க எம்.பியின் சொத்து ஏல அறிவிப்பை பேங்க் ஆப் பரோடா வங்கி திரும்ப பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு ஒரு நியாயம் பாஜக MPக்கு ஒரு நியாயமா?.. ரூ.56 கோடி ஏல அறிவிப்பை திரும்பப் பெற்ற வங்கி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பஞ்சாபின் குர்தாஸ்பூர் மக்களைத் தொகுதியின் பா.ஜ.க எம்.பி சன்னி தியோல். இவரது தந்தை தர்மேந்திரா. இவரது தாய் நடிகையும் எம்.பியுமான ஹேமா மாலினி. சினிமா மற்றும் அரசியல் குடும்பத்தில் இருந்த வந்த சன்னி தியோல் மும்பை ஜுஹூ பகுதியில் பங்களா சொத்து ஒன்று வாங்கியுள்ளார். இதற்காக இவர் பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.55.99 கோடி கடன் பெற்றுள்ளார்.

இந்த கடனை பா.ஜ.க எம்.பி சன்னி தியோல் முறையாக திரும்ப கட்டவில்லை. இதனால் பேங்க் ஆப் பரோடா வங்கி கடன் வாங்கிய சொத்துக்களுக்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியான அடுத்த 24 மணி நேரத்திற்குள் பேங்க் ஆப் பரோடா வங்கி திரும்ப பெற்றுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ’பா.ஜ.க எம்பி என்பதால் சன்னி தியோலுக்கு வங்கி நிர்வாகம் கரிசனம் காட்டுகிறதா? என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக கேள்விகளை எழுப்பி விமர்சனம் செய்துள்ளார்.

அதேபோல், தொழில்நுட்ப காரணங்களை காட்டி நடவடிக்கை எடுக்கப்படாது என்று பேங்க் ஆப் பரோடா அளித்துள்ள விளக்கத்தை பொதுமக்கள் பலரும் ஏற்க மறுத்துள்ளனர். வங்கியின் இந்த நடவடிக்கை, ஏழைகளை கசக்கி பிழியுங்கள், செல்வந்தர்களுக்கு கை கட்டி சேவை செய்யுங்கள் என்று பா.ஜ.க கட்டளை இட்டுள்ளதை சுட்டிக்காட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மக்களுக்கு ஒரு நியாயம் பாஜக MPக்கு ஒரு நியாயமா?.. ரூ.56 கோடி ஏல அறிவிப்பை திரும்பப் பெற்ற வங்கி!

வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு, ஏடிஎம் பரிவர்த்தனைகள் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகள் ஆகியவற்றிற்காக 2018 முதல் சென்ற வருடம் வரை, ஏழை எளிய மக்களிடமிருந்து 35 ஆயிரம் கோடி ரூபாயை இரக்கமின்றி வசூலித்துள்ள அதே வங்கிகள்தான் இந்த கைகட்டி சேவையையும் செய்திருக்கிறார்கள் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, வங்கிகளின் இந்த 'தொழில்நுட்ப காரணங்கள்' பா.ஜ.க தலைவர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்தான் என்றும், பொது மக்களுக்கு இல்லை என்றும் இணையதளவாசிகள் கிண்டலடித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories