இந்தியா

மனைவியை விட்டு பிரிய மறுத்த காதலன்.. ஆத்திரத்தில் மகனை கொன்ற காதலி.. டெல்லியில் பயங்கரம் !

டெல்லியில் முதல் மனைவியை பிரிய மறுத்ததால் ஆத்திரப்பட்ட பழிவாங்க எண்ணிய 2-வது மனைவி, தனது கணவரின் முதல் மனைவியின் 11 வயது மகனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை விட்டு பிரிய மறுத்த காதலன்.. ஆத்திரத்தில்  மகனை கொன்ற காதலி.. டெல்லியில் பயங்கரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

டெல்லியின் ரன்ஹோலா என்ற பகுதியில் வசித்து வருபவர் பூஜா குமாரி. இவரும் ஜிதேந்திரன் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளார். ஆனால் ஜிதேந்திரனுக்கு ஏற்கனவே திருமணமாகி 11 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், மீண்டும் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் 2019-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் முடிந்து இருவரும் சில காலம் தனியே வாழ்ந்து வந்த நிலையில், ஜிதேந்திரனுக்கு அவரது முதல் மனைவியின் 11 வயது மகனை தேடியுள்ளது. இதனால் அடிக்கடி தனது மகனை சென்று சந்தித்து வந்துள்ளார். இப்படியே தொடர்ந்து சந்தித்து வந்த இவர், ஒரு கட்டத்தில் மகனை பிரிய மனமில்லாமல் அங்கேயே இருந்துள்ளார்.

மனைவியை விட்டு பிரிய மறுத்த காதலன்.. ஆத்திரத்தில்  மகனை கொன்ற காதலி.. டெல்லியில் பயங்கரம் !

இதனால் கோபம் கொண்ட காதலி பூஜா குமாரி, ஜிதேந்திரனிடம் சண்டையிட்டுள்ளார். அதோடு அவர்களை விட்டு இங்கே வருமாறு வற்புறுத்தியுள்ளார். இருப்பினும் அவரது பேச்சை கேட்காமல் தனது முதல் மனைவி மகனுடன் வாழ்த்து வந்துள்ளார் ஜிதேந்திரன். இதனால் மகன் மீதுள்ள பாசத்தால் தான் தன்னிடம் வரவில்லை என்ற கோபத்தில், சிறுவனை கொலை செய்ய எண்ணியுள்ளார்.

அதன்படி கடந்த 10-ம் தேதி ஜிதேந்திரன் வீட்டுக்கு சென்ற பூஜா, தூங்கி கொண்டிருந்த சிறுவனை வாயை பொத்தி கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவரது உடலை ட்டிலுக்கு அடியில் உள்ள பெட்டியில் அடைத்து வைத்து கஅங்கிருந்து தப்பியோடியுள்ளார். மறுநாள் காலை மகனை காணவில்லை என்று பெற்றோர்கள் தேடிய நிலையில், அவர் சடல்மாக கண்டுபிடிக்கப்பட்டார்.

மனைவியை விட்டு பிரிய மறுத்த காதலன்.. ஆத்திரத்தில்  மகனை கொன்ற காதலி.. டெல்லியில் பயங்கரம் !

பின்னர் மருத்துவமனை கொண்டு சென்ற பெற்றோரிடம் மருத்துவர் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அன்றிரவு பூஜா குமாரி தான் அவரது வீட்டுக்கு இரவு நேரத்தில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை அதிரடியாக போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது தனது கணவர் அவரது முதல் மனைவியை பிரிய மறுத்ததால் ஆத்திரப்பட்டு 11 வயது மகனை கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து தற்போது பூஜா குமாரி சிறையில் உள்ளார். முதல் மனைவியை பிரிய மறுத்ததால் ஆத்திரப்பட்டு பழிவாங்க எண்ணிய 2-வது மனைவி, தனது கணவரின் முதல் மனைவியின் 11 வயது மகனை கொன்ற சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories