இந்தியா

ரூ.1000 உணவுக்கு ரூ.660 GST.. கொந்தளித்த பயணி.. போட்டோவை வெளியிட்டு IRCTC-யிடம் கேள்வி !

ரூ.1,025க்கு உணவு வாங்கிய இரயில் பயணி ஒருவர் அதற்காக 66% வரி என ரூ.660 செலுத்தியுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.1000 உணவுக்கு ரூ.660 GST.. கொந்தளித்த பயணி.. போட்டோவை வெளியிட்டு IRCTC-யிடம் கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாக நெடுதூரம் பயணிக்க ஏதுவாக அமைத்துள்ள போக்குவரத்து இரயில் தான். சாமானியர்களுக்கு ஏதாவாக இருக்கும் இந்த போக்குவரத்தில் கழிப்பறைகள், படுக்கை வசதிகள், உணவு என பல வசதிகள் இங்கு இருக்கும். சில நேரங்களில் அங்கிருக்கும் கழிப்பறைகள் சுத்தமாக இருக்காது; உணவுகளும் தரமற்றதாகவே இருப்பதாக கிறது. பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனால் இரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுக்கு ஏற்ற உணவுகளை விற்பனையாளர்களிடம் இருந்து சில நேரங்களில் பெற்றுக்கொள்கின்றனர். கடந்த சில மாதங்ளுக்கு முன்பு கூட இரயிலின் உணவில் கரப்பாண்பூச்சி, பல்லி உள்ளிட்டவை இருந்ததாக இணையத்தில் புகைப்படம் வெளியானது. மேலும் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் இரயிலின் உணவுகளில் உயிருடன் புழு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரூ.1000 உணவுக்கு ரூ.660 GST.. கொந்தளித்த பயணி.. போட்டோவை வெளியிட்டு IRCTC-யிடம் கேள்வி !

அதுமட்டுமின்றி சில சமயங்களில் பயணிகள் வாங்கும் உணவின் விலையை விட அதற்கு கொடுக்கப்படும் GST யின் விலை அதிகமாக இருக்கிறது. தற்போதும் அதே போல் ஒரு நிகழ்வு தான் அரங்கேறியுள்ளது. அதாவது பயணி ஒருவர் Ltt Puri Superfast Express இரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் தான் பயணித்த இரயிலில் 9 வெஜ் மீல்ஸ் + மட்டர் பன்னீர் வாங்கியுள்ளார். அப்போது அதற்காக 1,620 ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த உணவின் விலை ரூ.1,025 என்றும், அதற்காக இவர் செலுத்திய CGST & IGST விலை ரூ.660 என மொத்தமாக ரூ.1,620 செலுத்தியுள்ளார். இவர் வாங்கிய உணவுக்காக சுமார் 66% சதவீதம் வரி செலுத்தியுள்ளார். இதனை கண்டதும் பெரும் அதிர்ச்சியடைந்த அந்த பயணி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

ரூ.1000 உணவுக்கு ரூ.660 GST.. கொந்தளித்த பயணி.. போட்டோவை வெளியிட்டு IRCTC-யிடம் கேள்வி !

"இந்திய இரயில்வே உணவுமுறைக்கு என்ன ஆனது. நாங்கள் உணவுக்கு 66% வரி செலுத்தியுள்ளோம்" என்று குறிப்பிட்டு தான் பயணித்த இரயிலின் தனது PNR எண்ணையும், தான் வாங்கிய பில்லையும் இணைத்து IRCTC-க்கு கேள்வி எழுப்பியுள்ளார். இவரது இந்த பதிவு வைரலாகி பலரும் இந்திய இரயில்வேக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் உணவுக்கு 66% வரி செலுத்தியுள்ளது தொடர்பாக இணையவாசிகள் பல கருத்துகளை பதிவிட்டு வரும் நிலையில், "உங்கள் புகார் RailMadad இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் மூலம் உங்கள் புகாரைக் கண்காணிக்கலாம் https://railmadad.indianrailways.gov.in/madad/final/home.jsp" என்று IRCTC அவருக்கு பதில் அளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories