இந்தியா

பெற்றோர்களே உஷார்.. 8 மாத குழந்தையின் உயிரை பறித்த செல்போன் சார்ஜர்: அதிர்ச்சி சம்பவம்!

கர்நாடகாவில் செல்போன் சார்ஜரை வாயில் வைத்து விளையாடியபோது மின்சாரம் பாய்ந்து 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்களே உஷார்.. 8 மாத குழந்தையின் உயிரை பறித்த செல்போன் சார்ஜர்: அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம், உத்தர கன்னட மாவட்டத்திற்குட்பட்ட சித்தாரா பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் மின்சார வாரியத்தில் குத்தகை அடிப்படையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு எட்டு மாதத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தது.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் சந்தோஷ் வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் சஞ்சனா மற்றும் குழந்தை மட்டுமே இருந்துள்ளனர். சஞ்சனாவும் சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த குழந்தை எழுந்தவுடன் அருகே பிளக்கில் இணைக்கப்பட்டிருந்த செல்போன் சார்ஜர் வயரை வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது.

பெற்றோர்களே உஷார்.. 8 மாத குழந்தையின் உயிரை பறித்த செல்போன் சார்ஜர்: அதிர்ச்சி சம்பவம்!

அப்போது பிளக்கின் சுவிட்ச் ஆப் செய்யாமல் இருந்ததால் மின்சாரம் குழந்தையின் மீது பாய்ந்துள்ளது. இதில் குழந்தை அலறி துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்து வந்த போலிஸார் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் சார்ஜரை வாயில் வைத்து விளையாடியபோது மின்சாரம் பாய்ந்து 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories