இந்தியா

யார் சாமி நீ.. நகராட்சி கூட்டத்தில் தன்னைத் தானே செருப்பால் அடித்து கொண்ட கவுன்சிலர்: என்ன காரணம்?

ஆந்திராவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் கவுன்சிலர் ஒருவர் நகராட்சி கூட்டத்தில் தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

யார் சாமி நீ.. நகராட்சி கூட்டத்தில் தன்னைத் தானே செருப்பால் அடித்து கொண்ட கவுன்சிலர்:  என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேர்தல் நேரங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதி மக்களுக்குப் பல வாக்குறுதிகளை கொடுப்பார்கள். பின்னர் வெற்றி பெற்ற பிறகு தங்கள் தொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டு நாங்கள் அப்படி சொல்லவே இல்லை என்று நடிப்பார்கள். மக்களும் ஒரு கட்டத்தில் போராடிவார்த்து விட்டு அமைதியாகிவிடுவார்கள். பிறகு அடுத்த தேர்தலும் வந்துவிடும். அடுத்த வாக்குறுதிகளும் வந்துவிடும். ஒரு சிலரால் மட்டுமே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டுகிறார்கள்.

இந்நிலையில் ஆந்திராவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் கவுன்சிலர் ஒருவர் நகராட்சி கூட்டத்தில் தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

யார் சாமி நீ.. நகராட்சி கூட்டத்தில் தன்னைத் தானே செருப்பால் அடித்து கொண்ட கவுன்சிலர்:  என்ன காரணம்?

ஆந்திரா மாநிலம் நர்சிபட்டினம் நகராட்சி கவுன்சிலராக இருப்பவர் முலபர்த்தி ராமராஜூ. இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். நகராட்சி தேர்தலில் போட்டியிட்ட போது, சுத்தமான குடிநீர், தராமான சாலைகள், கழிவு நீர் வடிகால்கள் உள்ளிட்ட வாக்குறுதிகள் கொடுத்துள்ளார்.

இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்று மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தான் சொன்ன வாக்குறுதிகளை ராமராஜூவால் நிறைவேற்ற முடியவில்லை. மேலும் இவரது வார்டுக்கு நிதி ஒதுக்காததாலே இவரால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.

யார் சாமி நீ.. நகராட்சி கூட்டத்தில் தன்னைத் தானே செருப்பால் அடித்து கொண்ட கவுன்சிலர்:  என்ன காரணம்?

இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று நகராட்சி கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென தனது இறுக்கையில் இருந்து எழுந்து தான் அணிந்திருந்த செருப்பை கழட்டி தன்னைத்தானே அடித்துக் கொண்டுள்ளார். இதைப்பார்த்த சக கவுன்சிலர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories