இந்தியா

I AM Spider-Man.. 16 அடி உயரத்தில் இருந்து குதித்த 3ம் வகுப்பு மாணவன்: அடுத்து நடந்த அதிர்ச்சி - video!

உத்தர பிரதேசத்தில் நான்தான் ஸ்பைடர்மேன் என கூறிக்கொண்டு 16 அடி உயரத்தில் இருந்து சிறுவன் ஒருவன் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

I AM Spider-Man.. 16 அடி உயரத்தில் இருந்து குதித்த 3ம் வகுப்பு மாணவன்: அடுத்து நடந்த அதிர்ச்சி - video!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது 8 வயது மகன் விராட். சிறுவன் கான்பூர் கித்வாய் நகரில் உள்ள விரேந்திர ஸ்வரூப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் ஜூலை 19ம் தேதி வழக்கம்போல் விராட் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது இவரது வகுப்பு மாணவர்கள் ஸ்பைடர்மேன் குறித்து உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

மேலும் ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்திற்குக் கண் இமைக்கும் நேரத்தில் சென்றடைகிறார். ஓடிக்கொண்டே கட்டிடத்தில் ஏறுகிறார், யாராலும் பிடிக்க முடியாது என ஸ்பைடர்மேன் குறித்த சாகசங்களைப் புகழ்ந்து கொண்டிருந்தனர்.

இதைக்கேட்டுக் கொண்டிருந்த விராட் திடீரென பள்ளியின் முதல் தளத்திலிருந்து நான்தான் ஸ்பைடர்பேன் என கூறிக்கொண்டு குதித்துள்ளார். இதில் கீழே விழுந்த சிறுவனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனே ஆசிரியர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிறுவனுக்கு அங்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுவன் ஸ்பைடர்மேன் எனக் கூறிக் கொண்டே கீழே குதிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories