இந்தியா

நாட்டையே உலுக்கும் மணிப்பூர்.. பெண்களின் ஆடைகள் கிழித்த போதும் மவுனமாக இருக்கும் பிரதமர் மோடி!

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

நாட்டையே உலுக்கும் மணிப்பூர்.. பெண்களின் ஆடைகள் கிழித்த போதும் மவுனமாக இருக்கும் பிரதமர் மோடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் ஒன்றிய அரசு மணிப்பூர் வன்முறையைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது. இதனால் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் வன்முறையால் கொல்லப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநிலத்தை விட்டு அண்டை மாநிலங்களுக்குத் தஞ்சமடைந்துள்ளனர்.

இப்படி மணிப்பூர் மாநிலம் எரிந்து கொண்டிருக்கும் நிலையில், 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாகச் சாலையில் அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

நாட்டையே உலுக்கும் மணிப்பூர்.. பெண்களின் ஆடைகள் கிழித்த போதும் மவுனமாக இருக்கும் பிரதமர் மோடி!

மேலும் இந்த கொடூர சம்பவம் மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தைச் சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாகச் சாலையில் அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின்னர் அவர்களைக் கூட்டுப் பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதோடு இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அடித்து கொலை செய்துள்ளனர்.

மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு தற்போதுதான் அங்கு இணையம் வழங்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இன்று கூடிய நாடாளுமன்ற கூட்டத்திலும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் கொடூரம் குறித்து விவாதிக்க வேண்டும், பிரதமர் மோடி அவையில் பேச வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அவைத் தலைவர் இன்று பேச முடியாது என உறுதியாகத் தெரிவித்துவிட்டார். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி எழுந்தது. இதனால் நாளை வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கு முன்பு மாநிலங்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "மணிப்பூர் எரிகிறது. பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள். நிர்வாணமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இப்படி கொடூரம் நடந்து கொண்டிருக்கும் போது பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார்.

பிரதமர் மோடி பிரான்ஸ், எகிப்து மற்றும் பிற நாடுகளுக்குச் சென்றார். ஆனால் மணிப்பூருக்குச் செல்லவில்லை. மணிப்பூர் குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்திற்கு அழைத்திருக்கலாம். ஆனால் அதை அவர் செய்யவில்லை. 38 கட்சிகளைக் கூட்டுவதற்கு அவருக்கு நேரம் இருக்கிறது. ஆனால் மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரம் இல்லையா?" என கேள்வி எழுப்பினார்.

banner

Related Stories

Related Stories