இந்தியா

“முதலில் 3 லட்சம் டெபாசிட்.. உண்மை இருந்தால் Return செய்கிறோம்”: கோயில் குறித்த வழக்கில் நீதிபதி உத்தரவு

கோயில்கள் தொடர்பான பொதுநல வழக்கு தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மனின் நேர்மை தன்மையை நிரூபிக்கும் வகையில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“முதலில் 3 லட்சம் டெபாசிட்.. உண்மை இருந்தால் Return செய்கிறோம்”: கோயில் குறித்த வழக்கில் நீதிபதி உத்தரவு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் கோயில்கள் தொடர்பாக பொதுநல வழக்குகள் தொடர்ந்து வரும் திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 7 பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். தக்கார் நியமனம், தக்கார்களின் முன்னிலையில் உண்டியல் திறக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருந்தார்.

“முதலில் 3 லட்சம் டெபாசிட்.. உண்மை இருந்தால் Return செய்கிறோம்”: கோயில் குறித்த வழக்கில் நீதிபதி உத்தரவு

இந்த 7 வழக்குகளும் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி அதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் எந்த கோயிலின் பக்தர் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மனுதரார் ரங்கராஜன் நரசிம்மன், நான் எல்லா கோயிகளிலும் பக்தர் தான் என பதில் அளித்தார்.

“முதலில் 3 லட்சம் டெபாசிட்.. உண்மை இருந்தால் Return செய்கிறோம்”: கோயில் குறித்த வழக்கில் நீதிபதி உத்தரவு

அப்போது நீதிபதிகள், மனுதாரர் தனது நேர்மை தன்மையை நிரூபிக்கும் வகையில் வழக்கு ஒன்றுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் என 7 வழக்குகளுக்கும் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். வழக்குகள் நியாயமானதுதான் என நிரூபணமானால் மட்டுமே அந்த தொகை திரும்ப அளிக்கப்படும் எனவும், இல்லை என்றால் அந்த தொகை அபராதமாக எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதிகள் 3 லட்சத்து 50 ஆயிரம் தொகையை செலுத்திய பிறகு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

banner

Related Stories

Related Stories