இந்தியா

பாஜக ஆட்சியில் கொண்டு வந்த ஹெட்கேவர், சாவர்கர் பாடங்கள் நீக்கம்.. அதிரடி காட்டும் காங்கிரஸ் அரசு!

கர்நாடகாவில் முந்தைய பா.ஜ.க அரசு கொண்டுவந்த ஹெட்கேவர், சாவர்கர் பாடங்களை நீக்கக் காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

பாஜக ஆட்சியில் கொண்டு வந்த ஹெட்கேவர், சாவர்கர் பாடங்கள் நீக்கம்..  அதிரடி காட்டும் காங்கிரஸ் அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சாராக டி.கே.சிவகுமாரும் பொறுப்பேற்றனர்.

இதையடுத்து தேர்தலில் அறிவித்த பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட 5 முக்கிய அறிவிப்புகளைக் காங்கிரஸ் அரசு அமல்படுத்தி வருகிறது. மேலும் பா.ஜ.க ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் விரோத திட்டங்கள் நீக்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.

பாஜக ஆட்சியில் கொண்டு வந்த ஹெட்கேவர், சாவர்கர் பாடங்கள் நீக்கம்..  அதிரடி காட்டும் காங்கிரஸ் அரசு!

இதன்படி பா.ஜ.க ஆட்சியில் கொண்டுவந்த மதம் மாற்றும் தடைச் சட்டம் மற்றும் பாட புத்தகங்களில் இடம் பெற்ற ஹெட்கேவர், சாவர்கர் பாடங்களை நீக்கக் காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவில், இன்று முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பாஜக அரசு கொண்டு வந்த மதம் மாற்றம் தடை சட்டம் மற்றும் வேளாண் திருத்தச் சட்டம் திரும்பப் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சியில் கொண்டு வந்த ஹெட்கேவர், சாவர்கர் பாடங்கள் நீக்கம்..  அதிரடி காட்டும் காங்கிரஸ் அரசு!

மேலும் அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்த இரு சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதற்கான மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவர் மற்றும் சாவர்கர் குறித்த பாடங்கள் இந்த ஆண்டே நீக்கப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக சேவகர் சாவித்திரி பாய் புலே குறித்தான பாடம் கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா, "இந்த வருடமே ஹெட்கேவர் மற்றும் சாவர்கர் பாடங்கள் நீக்கப்பட்டு, மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும். பா.ஜ.க அரசு கொண்டுவந்த இந்துத்துவா கொள்கைகள் சார்ந்த சட்டங்கள் மற்றும் திட்டங்களைக் காங்கிரஸ் அரசு அகற்றும். சமூக நீதியைச் சார்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories