இந்தியா

கிரிக்கெட் பந்தை கையில் தொட்ட தலித் சிறுவன்.. வெட்டப்பட்ட கட்டை விரல்.. குஜராத்தில் தொடரும் சாதி வெறி !

தலித் சிறுவன் பந்தை கையால் எடுத்துக்கொடுத்ததால் ஏற்பட்ட மோதலில், தலித் இளைஞரின் கட்டை விரலை ஆதிக்க சாதியினர் வெட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் பந்தை கையில் தொட்ட தலித் சிறுவன்.. வெட்டப்பட்ட கட்டை விரல்.. குஜராத்தில் தொடரும் சாதி வெறி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக ஆளும் மாநிலங்களில் மத ரீதியான மோதல்கள் மட்டுமின்றி சாதிய ரீதியான கொடுமைகளும் அதிகரித்து வருகிறது. பள்ளியில் தண்ணீர் பானையை தொட்ட பட்டியலின சிறுவனை அடித்து கொன்ற ஆசிரியர் உட்பட பல கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது குஜராத்தில் பட்டியலின சிறுவன் பந்தை கையால் தொட்டதால் ஏற்பட்ட மோதலில், தலித் இளைஞரின் கட்டை விரலை ஆதிக்க சாதியினர் வெட்டியுள்ள சம்பவம்நிகழ்ந்துள்ளது.

கிரிக்கெட் பந்தை கையில் தொட்ட தலித் சிறுவன்.. வெட்டப்பட்ட கட்டை விரல்.. குஜராத்தில் தொடரும் சாதி வெறி !

குஜராத் மாநிலம் காகோஷி கிராமத்தில் 8 வயது தலித் சமுதாயத்தை சேர்ந்த சிறுவன் தந்து குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த சூழலில் இன்று பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆதிக்க சாதி என்று சொல்லிக்கொள்ளும் 7 பேர் கொண்ட கும்பல் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். இதனை அந்த சிறுவன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது உருண்டு போன அந்த பந்தை சிறுவன் தனது கையால் எடுத்தான். இதனை கண்ட அந்த கும்பல் உடனே சிறுவனை வசைபாடினர். மேலும் சிறுவனை அவரது சாதி பெயரை கூறி அசிங்க படுத்தினர். இதனை கண்ட சிறுவனின் மாமா திராஜ் பர்மர் மற்றும் அவரது சகோதரரும் அந்த கும்பலிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு நிலவியது.

கிரிக்கெட் பந்தை கையில் தொட்ட தலித் சிறுவன்.. வெட்டப்பட்ட கட்டை விரல்.. குஜராத்தில் தொடரும் சாதி வெறி !

இதனை தங்கள் மனதில் வைத்துக்கொண்ட அந்த கும்பல் சிறுவனின் மாமாவை பழிவாங்க எண்ணியுள்ளனர். இந்த சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே சிறுவனின் பெரிய மாமா அந்த இடத்தை விட்டு நகர, சின்ன மாமா அருகில் இருந்த டீ கடையில் இருந்து டீ அருந்தி கொண்டிருந்தார். இதனை கண்ட அந்த கும்பல், உடனே அவரிடம் வந்து வம்பிழுத்துள்ளனர்.

மேலும் தாங்கள் கொண்டு வந்த ஆயுதங்களை வைத்து அவரை தாக்கியதோடு, அந்த இளைஞரின் கையில் உள்ள கட்டை விரலை வெட்டி எடுத்துள்ளனர். இதில் அலறி துடித்த அந்த இளைஞரை மயக்க நிலையில் விட்டு விட்டு அந்த கும்பல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டனர். இதனை அறிந்த திராஜ், உடனே வந்து தனது சகோதரனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

கிரிக்கெட் பந்தை கையில் தொட்ட தலித் சிறுவன்.. வெட்டப்பட்ட கட்டை விரல்.. குஜராத்தில் தொடரும் சாதி வெறி !

அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் கொடுமை செய்த அந்த 7 பேர் கொண்ட கும்பலை அதிரடியாக கைது செய்தனர்.

கிரிக்கெட் பந்தை கையில் தொட்ட தலித் சிறுவன்.. வெட்டப்பட்ட கட்டை விரல்.. குஜராத்தில் தொடரும் சாதி வெறி !

மேலும் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டின் போது தலித் சிறுவன் பந்தை கையால் எடுத்துக்கொடுத்ததால் ஏற்பட்ட மோதலில், தலித் இளைஞரின் கட்டை விரலை ஆதிக்க சாதியினர் வெட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories