இந்தியா

விபத்தில் உயிரிழந்த 10-ம் வகுப்பு மாணவன்.. 10 பேருக்கு உறுப்பு தானம் செய்து நெகிழ்ச்சி !

கேரளாவில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 10-ம் வகுப்பு மாணவனின் உடல் உறுப்புகளை 10 பேருக்கு தானம் செய்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த 10-ம் வகுப்பு மாணவன்.. 10 பேருக்கு உறுப்பு தானம் செய்து நெகிழ்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரள மாநிலம் கரவாம் வஞ்சியூர் பகுதியில் வசித்து வருபவர் பினீஷ்குமார் - ரஜினி தம்பதி. இவர்களுக்கு சாரங் என்ற மகன் உள்ளார். இவர், அந்த திருவனந்தபுரம் ஆற்றிங்கல் அரசு ஆண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்வு முடிவுகள் வெளியானதில், மாணவர் சாரங் அனைத்து பாடங்களிலும் A+ சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றார்.

விபத்தில் உயிரிழந்த 10-ம் வகுப்பு மாணவன்.. 10 பேருக்கு உறுப்பு தானம் செய்து நெகிழ்ச்சி !

இதனிடையே மாணவர் சாரங் கடந்த 6-ம் தேதி தனது தாயுடன் ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட திடீர் விபத்தில் மாணவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவர் நேற்றைய முன்தினம் மூளை சாவடைந்தார்.

விபத்தில் உயிரிழந்த 10-ம் வகுப்பு மாணவன்.. 10 பேருக்கு உறுப்பு தானம் செய்து நெகிழ்ச்சி !
விபத்தில் உயிரிழந்த 10-ம் வகுப்பு மாணவன்.. 10 பேருக்கு உறுப்பு தானம் செய்து நெகிழ்ச்சி !

இதையடுத்து மாணவரின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்ய எண்ணினர். அதன்படி கல்லீரல், 2 கிட்னி, இதய வால்வு, கண்கள் என 10 உறுப்புகளை தானம் செய்தனர். பின்னர் மாணவரின் உடலை வீட்டுக்கு கொண்டு சென்று, மாணவர்கள், நண்பர்கள் என அஞ்சலி செலுத்துவதற்கு வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவருக்கு இறுதி சடங்குகள் முடிந்தது.

விபத்தில் உயிரிழந்த 10-ம் வகுப்பு மாணவன்.. 10 பேருக்கு உறுப்பு தானம் செய்து நெகிழ்ச்சி !

மகன் இறந்த பெரும் சோகத்திலும் மகனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்து பத்து பேருக்கு வாழ்வளித்த பெற்றோர்களின் மனித நேயம் அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. தானத்தில் சிறந்த தானம் உடல் உறுப்பு தானம் என்பதற்கு ஏற்றார் போல் அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வரவேண்டும் என்று பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories