இந்தியா

கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு.. துணை முதல்வர் யார்?: காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார்.

கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு.. துணை முதல்வர் யார்?: காங்கிரஸ்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக 135 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. இந்த தேர்தலில் மோடி பல முறை கர்நாடகா வந்து பிரச்சாரம் செய்தும் பா.ஜ.க 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு.. துணை முதல்வர் யார்?: காங்கிரஸ்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதையடுத்து கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாருக்கு இடையே போட்டி நிலவியது. மேலும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தைக் கட்சித் தலைமைக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினர். மேலும் சோனியா காந்தியிடமும் ஆலோசனை நடத்தினர்.

கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு.. துணை முதல்வர் யார்?: காங்கிரஸ்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பைக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார். மேலும் நாளை மறுநாள் கர்நாடக அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories