இந்தியா

அத்துமீறிய Rapido ஓட்டுநர்.. ஓடும் பைக்கில் இருந்து குதித்துத் தப்பிய இளம் பெண்: CCTV காட்சி!

கர்நாடகாவில் இளம் பெண்ணிடம் ரேப்பிடோ ஓட்டுநர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துமீறிய Rapido ஓட்டுநர்.. ஓடும் பைக்கில் இருந்து குதித்துத் தப்பிய இளம் பெண்: CCTV காட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கட்டக் கலைஞராகப் பணிபுரியும் 30 வயது பெண் ஒருவர் இந்திரா நகருக்குச் செல்ல ரேபிடோ பைக் டாக்ஸில் முன்பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவரது இடத்திற்கு புக் செய்த ரேபிடோ ஓட்டுநர் வந்துள்ளார். பிறகு அவரின் OTP எண்ணைச் சரிபார்த்து அவரை பைக்கில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் ரேபிடோ ஓட்டுநர் மாற்றுப்பாதையில் சென்றுள்ளார். இது குறித்துக் கேட்டபோது அவர் சரியாகப் பதில் சொல்லவில்லை. பிறகு யாரும் இல்லாத இடத்திற்குச் சென்றபோது பைக்கில் அமர்ந்த பெண்ணிடம் ரேபிடோ ஓட்டுநர் அத்துமீறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஓடும் பைக்கில் இருந்து குதித்துத் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் இது குறித்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் பெண்ணிடம் அத்துமீறிய ரேபிடோ ஓட்டுநர் ஆந்திராவைச் சேர்ந்த தீபக் ராவ் என்பதை கண்டறிந்தர்.

இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாக தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories