இந்தியா

இது கடைசிநாள்.. நண்பர்கள் கண்முன்னே பிரிந்த உயிர்: இறப்பதையறிந்து இளம் மருத்துவர் செய்த உருக்கமான சம்பவம்

திருமணமான சில நாட்களிலேயே, தான் புற்றுநோய் காரணமாக இறந்துபோவதை முன்கூட்டியே அறிந்த இளம் மருத்துவர், தனது மனைவி மற்றும் குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் செய்துள்ள நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது கடைசிநாள்.. நண்பர்கள் கண்முன்னே பிரிந்த உயிர்: இறப்பதையறிந்து இளம் மருத்துவர் செய்த உருக்கமான சம்பவம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருமணமான சில நாட்களிலேயே தான் நுரையீரல் புற்றுநோய் காரணமாக இறந்துபோவதை முன்கூட்டியே அறிந்த இளம் மருத்துவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்தையும் செய்துள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷவர்தன். 34 வயதுடைய இளைஞரான இவர் MBBS படித்து முடித்துவிட்டு, ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் இவருக்கு வீட்டில் இருந்து பெண் தேடியுள்ளனர். அப்போது உறவினர் பெண்ணை பெற்றோருக்கு பிடித்து போகவே கடந்த 2020-ம் ஆண்டு ஹர்ஷவர்தனுக்கும், உறவுக்கார பெண்ணான ஹேமா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இது கடைசிநாள்.. நண்பர்கள் கண்முன்னே பிரிந்த உயிர்: இறப்பதையறிந்து இளம் மருத்துவர் செய்த உருக்கமான சம்பவம்

ஆனால் திருமணமான 9 நாட்களிலேயே ஹர்ஷவர்தன் மீண்டும் ஆஸ்திரேலியா புறப்பட்டார். அங்கே சென்ற பிறகு விசா ஏற்பாடு செய்து விட்டு மனைவி ஹேமாவை அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள்ளும் விபரீத நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அதாவது ஹர்ஷவர்தனுக்கு தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

அந்த வகையில், அதே ஆண்டு அக்டோபர் மாதத்திலும் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் திடீரென இரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹர்ஷவர்தன், உடனே மருத்துவரை அணுகியுள்ளார். அங்கே அவருக்கு பல ஸ்கேன்கள் எடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கு நுரையீரலில் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் மனதை கல்லாக்கி கொண்டு தெரிவித்தனர்.

இது கடைசிநாள்.. நண்பர்கள் கண்முன்னே பிரிந்த உயிர்: இறப்பதையறிந்து இளம் மருத்துவர் செய்த உருக்கமான சம்பவம்

இதனை கேட்டு ஆடிப்போன ஹர்ஷவர்தன், நொறுங்கி போய்விட்டார். சில நேரங்களுக்கு அவரால் எதுவும் செய்ய முடியாமல் இருந்துள்ளார். ஆனால் அவரும் ஒரு மருத்துவர் என்பதால் எதார்த்தத்தை புரிந்துகொள்ள முடிந்தது. இதற்கு ஏதேனும் சிகிச்சை உள்ளதா என்பது குறித்து விசாரிக்கையில், இது இறுதிக்கட்டம் என்பதால் இன்னும் சில ஆண்டுகளில் இறந்து விடுவீர்கள் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார். இது அவருக்கு பேரிடியாக அமைந்தது.

பின்னர் மனதை திடப்படுத்தி கொண்டு முதலில் இதனை தன்னுடைய பெற்றோருக்கு தெரிவித்துள்ளார் ஹர்ஷவர்தன். அவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகவே, தான் சிகிச்சை எடுத்துவருவதாக கூறி சமாதானம் செய்துள்ளார். இருப்பினும் பெற்றோர்கள் மனம் பரிதவித்துள்ளது. தொடர்ந்து இதனை தன்னுடைய மனைவிக்கும் தெரிவித்துள்ளார்.

இது கடைசிநாள்.. நண்பர்கள் கண்முன்னே பிரிந்த உயிர்: இறப்பதையறிந்து இளம் மருத்துவர் செய்த உருக்கமான சம்பவம்

திருமணமாகி சில மாதங்களில் கணவருக்கு இப்படி ஒரு சம்பவம் நிகழவே பெரும் அதிர்ச்சிக்குள்ளானார் மனைவி ஹேமா. இது சொல்லி முடித்த சில நிமிடங்களிலேயே தான் விவகாரத்து செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டதும் மேலும் நொறுங்கி போன ஹேமாவை, ஹர்ஷவர்தன் நிலைமையை எடுத்து கூறி சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.

இருப்பினும் விவாகரத்து தொடர்பாக ஹேமா சம்மதம் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து நிலைமையை எடுத்துக்கூறி சம்மதம் தெரிவிக்க வைத்துள்ளார் ஹர்ஷவர்தன். மேலும் தன் மனைவிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்த ஹர்ஷவர்தன், தான் இல்லை என்றாலும் அவர் கஷ்டப்பட கூடாது என்பதற்காக அவருக்கு தேவையான பொருளாதார தொடர்பான விஷயங்களையும் செய்துகொடுக்க தொடங்கினார்.

இது கடைசிநாள்.. நண்பர்கள் கண்முன்னே பிரிந்த உயிர்: இறப்பதையறிந்து இளம் மருத்துவர் செய்த உருக்கமான சம்பவம்

அதோடு தான் இறப்பதற்கு முன்பு எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதித்து குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்த அவர், பெற்றோர் இந்தியாவுக்கு அழைத்த பிறகும் கூட அவர் இங்கே வரவில்லை. ஏனெனில், தம்மை கண்டு பெற்றோரும் தின்தோறும் வேதனை படுவதை பார்க்க முடியாது என்பதால்.

அதுமட்டுமின்றி தான் இறந்துபோவதை குறித்து தன்னுடைய வக்கீல் ஒருவர் மூலம் ஆஸ்திரேலியா அதிகாரிகளுக்கு தெரிவித்த ஹர்ஷவர்தன், தான் இறந்தபின் தன்னுடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகளையும் செய்ய தொடங்கினார். அதன்படி சட்ட ரீதியான விஷயங்களையும் ஆரம்பத்தில் சரி கட்டி, சவப்பெட்டி, விமான கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களையும் முன்கூட்டியே செய்து விட்டார்.

இது கடைசிநாள்.. நண்பர்கள் கண்முன்னே பிரிந்த உயிர்: இறப்பதையறிந்து இளம் மருத்துவர் செய்த உருக்கமான சம்பவம்

கண்ணீருடன் இவை அனைத்தையும் ஹர்ஷவர்தன் செய்தார். சாவு தன்னை நெருங்க நெருங்க அதற்கு தயாராக ஹர்ஷவர்தன் இருந்து வந்துள்ளார். அதன்படி தான் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. தான் இன்னும் சில நேரங்களில் இறந்து விடுவதை அறிந்த அவர், இரண்டு மணி நேரம் முன்பு தன்னுடைய நண்பர்களுக்கு தான் இறக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு பதறிப்போன அங்கிருக்கும் சில நண்பர்கள் உடனே அவரை ஓடோடி சென்று பார்த்துள்ளனர். பின்னர் அவர் நண்பர்கள் கண்முன்னே மரணம் அடைந்தார்.

இது கடைசிநாள்.. நண்பர்கள் கண்முன்னே பிரிந்த உயிர்: இறப்பதையறிந்து இளம் மருத்துவர் செய்த உருக்கமான சம்பவம்

ஹர்ஷவர்தன் ஏற்கனவே தனது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அனுமதி பெற்றதால் எந்த வித சிக்கலும் இன்றி, அவரது உடல் ஆஸ்திரிலேயாவில் இருந்து விமானம் மூலம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது சொந்த கிராமத்தில் அவரது இறுதி சடங்கு கடந்த 5-ம் தேதி நடைபெற்றது.

திருமணமான சில நாட்களிலேயே தான் நுரையீரல் புற்றுநோய் காரணமாக இறந்துபோவதை முன்கூட்டியே அறிந்த இளம் மருத்துவர், தனது மனைவி மற்றும் குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் செய்துள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

Related Stories