இந்தியா

”மோடியை அகற்று; நாட்டை காப்பாற்று”.. டெல்லி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு: 6 பேர் கைது!

பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

”மோடியை அகற்று; நாட்டை காப்பாற்று”.. டெல்லி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு: 6 பேர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே இஸ்லாமியர்கள், மாணவர்கள், பெண்கள், பொதுமக்களுக்கு என மக்கள் விரோத சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. பணமதிப்பிழப்பு, நீட் தேர்வு, வேளாண் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் என பா.ஜ.க அரசு கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்களின் பட்டியல் நீண்டது.

இது ஒரு புறம் என்றால் மற்றொரு புறம் தங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில ஆட்சிக்கு அழுத்தம் கொடுத்து பா.ஜ.க மிரட்டி வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, டெல்லி, கேரளா,மேற்குவங்கம் போன்ற மாநிலங்களின் ஆளுநர்கள் வெளிப்படையாகவே மாநில அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர்.

”மோடியை அகற்று; நாட்டை காப்பாற்று”.. டெல்லி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு: 6 பேர் கைது!

மகாராஷ்டிராவில் ஆட்சியிலிருந்த சிவசோனா கட்சியை உடைத்து ஆட்சியைக் கவிழ்த்தது பா.ஜ.க . தற்போது டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்க பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி வருகிறது. அதன் ஒருபகுதிதான் மணீஷ் சிசோடியாவின் கைது நடவடிக்கையும் கூட.

மேலும் நேற்று டெல்ல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய விடாமல் ஒன்றி அரசு தடுத்துள்ளது. அதன் பிறகு முதல்வரின் கடிதத்திற்கு அடுத்து பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதி கொடுத்தது.

”மோடியை அகற்று; நாட்டை காப்பாற்று”.. டெல்லி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு: 6 பேர் கைது!

இந்நிலையில் டெல்லி முழுவதும் மோடியை அகற்று, நாட்டை காப்பாற்று என பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த போஸ்டர்களை டெல்லி போலிஸார் அகற்றியுள்ளனர்.

மேலும் இந்த போஸ்டர் ஒட்டியது தொடர்பாக 6 பேரைக் கைது செய்துள்ளது. அதோடு 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கக் கூடாது என்ன என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் ஒரு போஸ்டரை பார்த்து இவ்வளவு பயம் ஏன்? என ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories