இந்தியா

அத்துமீறிய செயல்.. வரலாற்றில் முதன்முறையாக டெல்லியில் பட்ஜெட் தாக்கலுக்கு தடை விதித்த ஒன்றிய பா.ஜ.க அரசு!

டெல்லி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பட்ஜெட்டுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்க மறுத்ததை அடுத்து பட்ஜெட் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்துமீறிய செயல்.. வரலாற்றில் முதன்முறையாக டெல்லியில் பட்ஜெட் தாக்கலுக்கு தடை விதித்த ஒன்றிய பா.ஜ.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் தற்போது ஆளும் கட்சியாக இருந்து வரும் பா.ஜ.க., தங்களது கட்சியை பலப்படுத்தப்பட்ட பல்வேறு தகிடுதத்தோம் வேலையை செய்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் உள்ள பா.ஜ.க அல்லாத ஆளும் கட்சிகளை கவிழ்க்கவும் சதி திட்டம் தீட்டிவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட ஆளும் கட்சியான சிவ சேனா ஆட்சியை கவிழ்த்தது.

அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்டு 'மகா விகாஸ் அகாடி ' என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த கூட்டணியை பா.ஜ.க. கலைக்க பல்வேறு யுக்திகளை செய்து வந்த நிலையில், சிவ சேனா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆட்சியை கவிழ்த்தார்.

அத்துமீறிய செயல்.. வரலாற்றில் முதன்முறையாக டெல்லியில் பட்ஜெட் தாக்கலுக்கு தடை விதித்த ஒன்றிய பா.ஜ.க அரசு!

மேலும் ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் சேர்ந்து பெரும்பான்மையை காட்டி தற்போது மகாராஷ்டிராவின் முதலமைச்சராக உள்ளார். இது ஒரு புறம் இருக்க, அண்மையில் பஞ்சாபில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதோடு ஆம் ஆத்மி கட்சி ஆங்காங்கே தங்களது செல்வாக்கை நிரூபித்து வருகின்றன. இதனால் மத்திய பாஜகவின் கவனம் வளர்ந்து வரும் ஆம் ஆத்மி கட்சி மீது திரும்பியுள்ளது.

அது மட்டுமல்லாது தலைநகர் டெல்லியிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருவதால், அங்கே அவ்வப்போது கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கலைக்க முயன்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தது. மேலும் அக்கட்சியிலுள்ள முக்கிய உறுப்பினர்களுக்கு பணத்தாசை காட்டி தங்களது பக்கம் இழுக்கவும் முயன்று வருகிறது.

அத்துமீறிய செயல்.. வரலாற்றில் முதன்முறையாக டெல்லியில் பட்ஜெட் தாக்கலுக்கு தடை விதித்த ஒன்றிய பா.ஜ.க அரசு!

அதன்படி சமீபத்தில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி அரசின் மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு என குற்றம்சாட்டி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.

இது டெல்லி அரசியலில் பெரிய புயலை கிளப்பியது. மேலும் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்க அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் டெல்லி பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பட்ஜெட்டுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்க மறுத்ததை அடுத்து வரலாற்றில் முதன்முறையாக பட்ஜெட் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்துமீறிய செயல்.. வரலாற்றில் முதன்முறையாக டெல்லியில் பட்ஜெட் தாக்கலுக்கு தடை விதித்த ஒன்றிய பா.ஜ.க அரசு!

டெல்லி மாநில அரசின் நிதிநிலைஅறிக்கை ஒவ்வொரு முறையும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகே தாக்கல் செய்யப்படும். அதன்படி டெல்லி பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பட்ஜெட்டுக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்க மறுத்து திருப்பி அனுப்பியது.

பட்ஜெட் குறித்து சில கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டுள்ள உள்துறை அமைச்சகம், உரிய விளக்கம் அளிக்கும் வரை பட்ஜெட் தாக்கல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விளக்கம் அளித்து மறு ஒப்புதல் பெறுவதற்கு உரிய அவகாசம் இல்லாததால் பட்ஜெட் தாக்கல் கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அத்துமீறிய செயல்.. வரலாற்றில் முதன்முறையாக டெல்லியில் பட்ஜெட் தாக்கலுக்கு தடை விதித்த ஒன்றிய பா.ஜ.க அரசு!

ஒரு மாநில அரசின் பட்ஜெட்டை நிறுத்தி வைப்பது இந்திய வரலாற்றில் இதுவரை நடக்காத செயல் என்றும் ஒன்றிய அரசு அத்துமீறி செயல்படுவதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி அரசின் விளம்பரங்களுக்காக பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இதற்கு டெல்லி நிதி அமைச்சர் கைலாஷ்கேலாட் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories