இந்தியா

ரத்த வாந்தி எடுத்த இளைஞர்.. வயிற்றில் இருந்த 56 பிளேடுகள்.. பரிசோதனை செய்து அதிர்ந்த மருத்துவர்கள் !

ராஜஸ்தானைச் சேர்ந்த 25 வயது இளைஞர் 56 பிளேடுகளை விழுங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரத்த வாந்தி எடுத்த இளைஞர்.. வயிற்றில் இருந்த 56 பிளேடுகள்.. பரிசோதனை செய்து அதிர்ந்த மருத்துவர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சில மாதங்களுக்கு முன்னர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் வயிற்றிலிருந்து 62 ஸ்பூன்களை மருத்துவர்கள் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக வெளியே எடுத்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பின்னர் கர்நாடகத்தை சேர்ந்த 58 வயது நபரின் வயிற்றில் இருந்து ஒன்றரை கிலோ எடைகொண்ட 187 நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் ராஜஸ்தானின் நடைபெற்றுள்ளது.

ரத்த வாந்தி எடுத்த இளைஞர்.. வயிற்றில் இருந்த 56 பிளேடுகள்.. பரிசோதனை செய்து அதிர்ந்த மருத்துவர்கள் !

ராஜஸ்தானைச் சேர்ந்த 25 வயது யஷ்பால் சிங் என்ற நபர் ஜலோர் மாவட்டத்தின் சாஞ்சூர் என்னும் இடத்தில் உள்ள டேட்டா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் திடிரென ரத்த வாந்தி எடுத்த நிலையில் அங்கு இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைத்துள்ளனர்.

அதன்படி அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் அவரது வயிற்றில் சில உலோகங்கள் இருந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவருக்கு அடுத்தபடியாக எண்டோஸ்கோபி எடுக்கப்பட்டதில் அவரின் வயிற்றில் நிறைய பிளேடுகள் இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் அவருக்கு அறுவைசிகிச்சை நடைபெற்று அவரின் வயிற்றில் இருந்த பிளேடுகள் அகற்றப்பட்டது.

ரத்த வாந்தி எடுத்த இளைஞர்.. வயிற்றில் இருந்த 56 பிளேடுகள்.. பரிசோதனை செய்து அதிர்ந்த மருத்துவர்கள் !

அவரின் வயிற்றில் இருந்து 56 பிளேடுகள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நபர் பிளாஸ்டிக் கவருடன் பிளேடுகளை சாப்பிட்டதால் அதை விழுங்கும்போது காயம் ஏற்படவில்லை என்றும் ஆனால் வயிற்றுக்குள் சென்று அது உள்உறுப்புகளை சேதப்படுத்தியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories