இந்தியா

மாதவிடாய் இரத்தத்தை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற கணவர் குடும்பத்தார்: மருமகள் அதிர்ச்சி புகார் -பின்னணி என்ன?

தனது மாதவிடாய் ரத்தத்தை எடுத்து விற்க வற்புறுத்தியதாக கூறி கணவர் குடும்பத்தார் மீது மருமகள் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாதவிடாய் இரத்தத்தை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற கணவர் குடும்பத்தார்: மருமகள் அதிர்ச்சி புகார் -பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அமைந்துள்ளது பீட் என்ற பகுதி. இங்கு 28 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு முன்னர் காதலித்து திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். கணவர், மாமனார், மாமியார் ஆகியோருடன் வசித்து வரும் இந்த பெண்ணை, குடும்பத்தார் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

இதனால் கடந்த 2021-ம் ஆண்டு பெண் புகார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் அவரிடம் அனைவரும் சேர்ந்து சமரசம் பேசி, வழக்கை வாபஸ் பெற வைத்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

மாதவிடாய் இரத்தத்தை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற கணவர் குடும்பத்தார்: மருமகள் அதிர்ச்சி புகார் -பின்னணி என்ன?

அதன்படி தனது மாமியார், மாமனார், கணவர், கணவரின் சகோதரர் ஆகியோர் தன்னுடைய மாதவிடாய் இரத்தத்தை எடுத்து கட்டாயப்படுத்தி விற்றதாக கடந்த மார்ச் 7-ம் தேதி விஷ்ராந்த்வாடி என்ற பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரில், "கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கணபதி பண்டிகையின்போது நான் எனது கணவரின் சகோதரர் வீட்டில் தங்கியிருந்தேன். அப்போது, எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அந்த சமயத்தில் எனது கணவரின் சகோதரர் என்னிடம் வந்து, எனது 'மாதவிடாய் இரத்தம்' தேவைப்படுவதாக கூறினார். நான் கோபமடைந்து அவரை திட்டினேன்.

மாதவிடாய் இரத்தத்தை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற கணவர் குடும்பத்தார்: மருமகள் அதிர்ச்சி புகார் -பின்னணி என்ன?

மேலும் அவரது மனைவியிடம் கேட்குமாறு கூறினேன். அதற்கு அவர், 'குழந்தை இல்லாத பெண்ணின் மாதவிடாய் இரத்தம்' தேவைப்படுவதாக கூறினார். அதோடு இந்த இரத்தத்தை விற்றால் ரூ.50 ஆயிரம் வரை கிடைக்கும் என்றும் சொன்னார். நான் கோபப்பட்டு அவரை திட்டி இதற்கு மறுப்பு தெரிவித்தேன். இருப்பினும் என்னை மீறி எனது மாதவிடாய் இரத்தத்தை எடுத்து சென்று விட்டனர்.

இதற்கு என் மாமனார், மாமியார் என அனைவரும் உடந்தையாக இருந்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த புகார் காவல்துறை அதிகாரிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மாதவிடாய் இரத்தத்தை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற கணவர் குடும்பத்தார்: மருமகள் அதிர்ச்சி புகார் -பின்னணி என்ன?

இதுகுறித்து விஷ்ராந்த்வாடி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் தத்தாத்ரே பாப்கர் கூறுகையில், "இந்த பெண் அளித்த புகார் பெரும் அதிர்ச்சிகரமானதாக உள்ளது. இவர் அளித்து புகாரின் பேரில் அவரது குடும்பத்தார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்போடு வருகிறது.

இந்த சம்பவம் அவரது கணவரின் சகோதரர் பணிபுரியும் இடத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. பெண் அளித்த புகாரின்படி அவரது மாதவிடாய் இரத்தம் மாந்திரீகத்துக்கு பயன்படுத்த விற்கப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார். தனது மாதவிடாய் இரத்தத்தை வற்புறுத்தி எடுத்து விற்றதாக கணவர் குடும்பத்தார் மீது மருமகள் புகார் அளித்துள்ளது மஹாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories