இந்தியா

சொகுசு காரில் வந்து அரசு சார்பில் வைக்கப்பட்ட பூந்தொட்டிகளை திருடிச்சென்ற பிரபல Youtuber.. வைரலான வீடியோ!

பிரபல யூடியூபர் ஒருவர் நகரை அலங்கரிக்க அரசு சார்பில் வைத்திருந்த பூந்தொட்டிகளை தனது சொகுசு காரில் திருடிச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொகுசு காரில் வந்து அரசு சார்பில் வைக்கப்பட்ட பூந்தொட்டிகளை திருடிச்சென்ற பிரபல Youtuber.. வைரலான வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஹரியானா மாநிலம் குருகிராமத்தை சேர்ந்தவர் எல்விஷ் யாதவ். பிரபலமான யூடியூபரான அவர் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கியா கார்னிவல் சொகுசு கார் ஒன்றை வைத்துள்ளார். கடந்த ஆண்டு ராஜஸ்தானில் இந்த காரில் அவர் பேரணி சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.

பாஜக தலைவர்களுக்கு நெருக்கமான எல்விஷ் யாதவ் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி போன்றோருடன் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை திருடியதாக அவர்மீது புகார் எழுந்துள்ளது.

சொகுசு காரில் வந்து அரசு சார்பில் வைக்கப்பட்ட பூந்தொட்டிகளை திருடிச்சென்ற பிரபல Youtuber.. வைரலான வீடியோ!

இது தொடர்பாக வைரலாக வீடியோவில், ஜி-20 மாநாட்டை ஒட்டி குருகிராம் நகரை அலங்கரிக்க வைத்திருந்த பூந்தொட்டிகளை கியா கார்னிவல் சொகுசு காரில் வந்த சிலர் எடுத்துக்கொண்டு செல்வது பதிவாகியுள்ளது. காரிலிருந்து இறங்கி அந்த பூந்தொட்டிகளை தங்கள் காரின் பின்பகுதியில் வைத்து எடுத்துச்செல்கின்றனர்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அந்த காரில் இருக்கும் பதிவெண்ணை வைத்து அந்த கார் எல்விஷ் யாதவ்க்கு சொந்தமானது எனவும் அவர்தான் இந்த பூந்தொட்டிகளை திருடி சென்றதாகவும் சமூக வலைத்தளத்தில் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

வீடியோ வைரலானதை அடுத்து, குருகிராம் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.கே.சாஹல், இந்த வைரலான வீடியோ எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது என்றும் திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories