இந்தியா

MLA கொலை வழக்கு சாட்சியாளரை சுட்டுக்கொலை செய்த மர்ம கும்பல்: உபி-யில் நடந்த கொடூரம்.. நடுங்க வைத்த VIDEO!

உத்தரப் பிரதேச எம்.எல்.ஏ கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த நபரை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MLA கொலை வழக்கு சாட்சியாளரை சுட்டுக்கொலை செய்த மர்ம கும்பல்: உபி-யில் நடந்த கொடூரம்.. நடுங்க வைத்த VIDEO!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக, யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஆண்டுமுதலே பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது.

அதேபோல், எதிர்க்கட்சி மற்றும் அரசியல் ரீதியாக பழிவாங்க நடத்தப்படும் தாக்குதல் மற்றும் கொலை போன்ற வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளது. அந்தவகையில், உத்தரப் பிரதேச எம்.எல்.ஏ கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த நபரை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

MLA கொலை வழக்கு சாட்சியாளரை சுட்டுக்கொலை செய்த மர்ம கும்பல்: உபி-யில் நடந்த கொடூரம்.. நடுங்க வைத்த VIDEO!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜூபால். இவர் கடந்த 2005ம் ஆண்டு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலை வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த வழக்கில் உமேஷ்பால் என்பவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டார்.

அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் உத்தரபிரேதச போலிஸார் முறையான பாதுகாப்பு வழங்க வில்லை என்று குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. இந்நிலையில் உமேஷ்பால் இன்று வெளியே சென்றுவிட்டு, அவரது காரில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த 5 பேருக்கும் மேல் இருந்த மர்ம கும்பல் அவர் காரில் இருந்து வெளியே வந்தபோது அவர் மீது நாட்டுவெடி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது அவருடன் இருந்த போலிஸார் மர்ம நபர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில் பலத்தக் காயமடைந்த உமேஷ்பாலும், இரண்டு போலிஸாரும் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தீவிர சிகிச்சையில் இருந்த உமேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலிஸாரின் நிலைமை கவலைக் கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை உயரதிகாரிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories