இந்தியா

விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

பெங்களூருவில் காதலனுடன் சேர்ந்து இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம் யாதகிரி மாவட்ட ஹிருசகுண்டகி கிராமத்தைச் சேர்ந்தவர் சுவர்ணா. இவர் ஈஷப்பா என்ற இளைஞரைக் காதலித்து வந்தார். இந்த காதல் பற்றி அவரது பெற்றோர்களுக்குத் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பின்னர் மகளை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து சுவர்ணா கணவனுடன் பெங்களூருக்குச் சென்றுள்ளார். திருமணம் முடிந்தாலும் காதலனை அவரால் மறக்க முடியவில்லை.

விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

அதேபோல் காதலி சுவர்ணாவுக்கு அடிக்கடி ஈஷப்பாவும் தொலைபேசியில் அழைத்துப் பேசி வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூருவில் இருந்து யாருக்கும் தெரியாமல் யாதகிரிக்கு வந்து காதலன் ஈஷப்பாவை சந்தித்துள்ளார்.

பின்னர் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதன்படி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். வனப்பகுதியில் இருவரது உடலையும் பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

அங்கு வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். காதலனை மறக்க முடியாததால் காதலனுடன் சேர்ந்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories