இந்தியா

Freezerல் காதலியின் சடலம்.. வேறொரு பெண்ணுடன் திருமணம்.. - டெல்லியை உலுக்கும் தொடரும் கொலைகள் !

காதலியை கொலை செய்து அவரது உடல் Freezerல் வைக்கப்பட்டிருந்த சம்பவம் மீண்டும் டெல்லியில் அரங்கேறி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Freezerல் காதலியின் சடலம்.. வேறொரு பெண்ணுடன் திருமணம்.. - டெல்லியை உலுக்கும் தொடரும் கொலைகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

டெல்லியை உலுக்கிய ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கை போலவே தற்போது மீண்டும் டெல்லியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் அப்தாப் - ஷ்ரத்தா ஆகிய ஜோடி டெல்லியில் லிவ்-இன்னில் வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது காதலி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனிடம் கூறியதில் இருவருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்துள்ளது.

Freezerல் காதலியின் சடலம்.. வேறொரு பெண்ணுடன் திருமணம்.. - டெல்லியை உலுக்கும் தொடரும் கொலைகள் !

இதனால் ஆத்திரமடைந்த அப்தாப் தனது காதலியை கொலை செய்துவிட்டு பின்னர் அவரை 35 துண்டுகளாக வெட்டி அவ்வப்போது காட்டு பகுதி, குளப்பகுதி உள்ளிட்ட இடங்களில் வீசியுள்ளார். துண்டாக்கப்பட்ட உடல்களை பதப்படுத்த அவர் பிரிட்ஜ் ஒன்றையும் பயன்படுத்தியுள்ளார். தற்போது அவர் சிறையில் இருக்கு நிலையில், இதே போல் பல்வேறு மாநிலங்களில் சில சம்பவங்கள் நடந்துள்ளது செய்திகளில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Freezerல் காதலியின் சடலம்.. வேறொரு பெண்ணுடன் திருமணம்.. - டெல்லியை உலுக்கும் தொடரும் கொலைகள் !

இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் டெல்லியில் இதே போல் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சாகில் கெலாட். இவர் டெல்லி உத்தம் நகரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணான நிக்கி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், நிக்கி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சாகிலிடம் கூறியுள்ளார்.

Freezerல் காதலியின் சடலம்.. வேறொரு பெண்ணுடன் திருமணம்.. - டெல்லியை உலுக்கும் தொடரும் கொலைகள் !

ஆனால் சாகிலோ இதற்கு தாமதம் செய்து வந்துள்ளார். இதனால் மீண்டும் மீண்டும் நிக்கி அவரை வற்புறுத்தியுள்ளார். இதனிடையே சாகில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார். இதையறிந்த நிக்கி அவரிடம் போய் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாகில், நிக்கியை போன் கேபிளை வைத்து கழுத்தை நெரித்துள்ளார்.

Freezerல் காதலியின் சடலம்.. வேறொரு பெண்ணுடன் திருமணம்.. - டெல்லியை உலுக்கும் தொடரும் கொலைகள் !

இதில் மூச்சுத்திணறிய நிக்கி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். அதன் பிறகு அவரது சடலத்தை சாகிலின் தாபாவிற்க்கு (சாலையோர கடை) கொண்டு வந்துள்ளார். பின்னர் அவரது உடலை அவர் காபாவில் இருக்கும் Freezerல் அடைத்து வைத்துள்ளார். கடந்த பிப்ரவரி 9-10-ம் தேதி நள்ளிரவு சமயத்தில் நடந்த இந்த சம்பவத்தை அவர் முழுமையாக மறைக்க எண்ணியுள்ளார்.

Freezerல் காதலியின் சடலம்.. வேறொரு பெண்ணுடன் திருமணம்.. - டெல்லியை உலுக்கும் தொடரும் கொலைகள் !

பின்னர் Freezerல் வைக்கப்பட்டிருந்த சடலம் குறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் சாகிலை கைது செய்தனர். ஆரம்பத்தில் இதனை மறுத்த சாஹில் அதன்பிறகு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.

காதலியை கொலை செய்து அவரது உடல் Freezerல் வைக்கப்பட்டிருந்த சம்பவம் மீண்டும் டெல்லியில் அரங்கேறி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories