இந்தியா

வங்கியில் புகுந்து ஊழியர் கன்னத்தில் பளாரென அடித்த வாடிக்கையாளர்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

குஜராத்தில் வங்கி ஊழியர் மீது வாடிக்கையாளர் ஒருவர் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கியில் புகுந்து ஊழியர் கன்னத்தில் பளாரென அடித்த வாடிக்கையாளர்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் மாநிலம் நாடியா மாவட்டம் கபவட்வாஞ்ச் பகுதியில் பாங்க் ஆஃப் இந்தியாவின் வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மனிஷ் தங்கர் என்பவர் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வழக்கம்போல் வங்கியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது இருக்கை அருகே வந்த ஒருவர் திடீரென அவர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அந்த நபரைத் தடுக்க முயன்றனர். அப்போதும் அவர் உடன் வந்த நண்பர்கள் ஊழியர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் மீண்டும் மீண்டும் ஊழியரின் கண்ணத்தில் பளார் பளார் என அடித்துள்ளார். பின்னர் அவரை தடுத்து நிறுத்தி அங்கிருந்து வெளியே இழுத்துச் சென்றனர்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து வங்கி ஊழியரைத் தாக்கியது சமர்த் பிரம்மத் என்று தெரியவந்தது.

வங்கியில் புகுந்து ஊழியர் கன்னத்தில் பளாரென அடித்த வாடிக்கையாளர்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

இதையடுத்து போலிஸார் சமர்த் பிரம்மத் மற்றும் அவருடன் இருந்த மற்றொருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சமர்த் பிரம்மத் வங்கியில் கடன் வாங்கியுள்ளார்.

இதற்கான காப்பீட்டு பாலிசியை அவர் சமர்பிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் மனிஷ் தங்கர் அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு காப்பீட்டு பாலிசியை சமர்பிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி மிரட்டியும் உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சமர்த் பிரம்மத் வங்கிக்குச் சென்று மனிஷ் தங்கர் மீது கொடூரமாகத் தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.

banner

Related Stories

Related Stories