இந்தியா

இரவு நேரத்தில் நிர்வாணமாக சுற்றித்திரியும் பெண்.. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்: காரணம் என்ன?

உத்தர பிரதேசத்தில் இரவு நேரத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாகத் தெருவில் சுற்றித்திரியும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரவு நேரத்தில் நிர்வாணமாக சுற்றித்திரியும் பெண்.. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்: காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா முழுவதும் குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி-யை பொருத்தி போலிஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அப்போது சில நேரங்களில் விநோதமாக நடக்கும் சம்பவங்களும் இந்த சிசிடிவி காட்சி மூலம் தெரியவருகிறது.

இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி அதன் உண்மை தன்மைகளை கண்டறிந்து வருகின்றனர். பல நேரங்களில் இந்த சி.சி.டி.வி காட்சிகள் பெரிய திருடர்களைப் பிடிக்கவும் உதவி செய்கிறது.

அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் இரவு நேரத்தில் பெண் ஒருவர் வீதியில் சுற்றித்திரிந்து வீட்டின் கதவுகளை தட்டி செல்லும் சி.சி.டி.வி காட்சிவெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ராம்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 29ம் தேதி நடந்துள்ளது.

இந்த வீடியோவில், நிர்வாணமாக நடந்து செல்லும் பெண் ஒருவர் அப்பகுதியில் இருக்கும் வீட்டின் கதவுகளை எல்லாம் தட்டி விட்டு செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது.

இரவு நேரத்தில் நிர்வாணமாக சுற்றித்திரியும் பெண்.. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்: காரணம் என்ன?

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து போலிஸார் அந்த பெண் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கக் கூடும் எனவும் சிலர் கூறுகின்றனர். இதனால் அந்த பெண்ணை எங்காவது கண்டால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories