இந்தியா

மாணவர் சங்கம் TO அமைச்சர்.. ஆபாச பட சர்ச்சை.. கோடீஸ்வரர்.. இறுதியில் சுட்டு கொலை : யார் இந்த நபா தாஸ் ?

காவல் ஆய்வாளரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா தாஸ் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மாணவர் சங்கம் TO அமைச்சர்.. ஆபாச பட சர்ச்சை.. கோடீஸ்வரர்.. இறுதியில் சுட்டு கொலை : யார் இந்த நபா தாஸ் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒடிசா மாநிலத்தில் தற்போது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அனைத்து மாநிலங்களில் நிலவும் அதே அரசியல் மோதல்கள் அடிக்கடி காணப்படும். இங்கு சுகாதாரத் துறை அமைச்சர் இருப்பவர் நபா கிஷோர் தாஸ்.

இந்த நிலையில் நபா தாஸ் மீது மர்ம நபர் ஒருவர் நேற்று துப்பாக்கி சூடு நடத்தியதில், அவர் உயிரிழந்தார். ஒடிசாவின் ஜர்சுகுடா பகுதியிலுள்ள பிரஜராஜ் நகரில் நேற்று குறைதீர்ப்பு அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினாக அமைச்சர் தாஸ் கலந்துகொண்டார். அப்போது அவரது பாதுகாப்புக்கு அதிகமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் அவருக்கு அங்கிருந்த பொதுமக்கள் வரவேற்பும் கொடுத்தனர்.

மாணவர் சங்கம் TO அமைச்சர்.. ஆபாச பட சர்ச்சை.. கோடீஸ்வரர்.. இறுதியில் சுட்டு கொலை : யார் இந்த நபா தாஸ் ?

தொடர்ந்து காரின் கதவை திறந்தபோது, அவர் மீது மர்ம நபர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அவரது மார்பு பகுதியில் இரண்டு முறை சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்து சுருண்டு விழுந்த அமைச்சரை அருகிலிருந்த அதிகாரிகள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து சக அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளர் கோபால் தாஸ் என்பவர்தான் அமைச்சரை சுட்டதாக தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறை அதிகாரிகள் உடனே அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அதிகாரியை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாணவர் சங்கம் TO அமைச்சர்.. ஆபாச பட சர்ச்சை.. கோடீஸ்வரர்.. இறுதியில் சுட்டு கொலை : யார் இந்த நபா தாஸ் ?

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர், மேல் சிகிச்சைக்காக புவனேஸ்வர் அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கடந்த சில மணி நேரங்கள் வரை தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். தொடர்ந்து காவல் அதிகாரி, அமைச்சரை எதற்கு துப்பாக்கியால் சுட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த அமைச்சர் தொடர்ந்து அவரது தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

மாணவர் சங்கம் TO அமைச்சர்.. ஆபாச பட சர்ச்சை.. கோடீஸ்வரர்.. இறுதியில் சுட்டு கொலை : யார் இந்த நபா தாஸ் ?

நபா கிஷோர் தாஸ் - அரசியல் :

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் நபா கிஷோர் தாஸ். தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பத்தில் இந்திய மாணவர் சங்கத்தில் தொடங்கினார். தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் தண்னை இணைத்துக்கொண்டார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு அம்மாநிலத்தில் நடைபெற்ற 2004-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜர்ஸுகுடா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதை மாற்றும் முயற்சியாக அடுத்து வந்த 2009-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஜர்ஸுகுடா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து மீண்டும் 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்.

மாணவர் சங்கம் TO அமைச்சர்.. ஆபாச பட சர்ச்சை.. கோடீஸ்வரர்.. இறுதியில் சுட்டு கொலை : யார் இந்த நபா தாஸ் ?

2 முறை எம்.எல்.ஏவாக இருந்த இவர், 2015-ல் நடைபெற்ற அம்மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது ஆபாச படம் பார்த்ததாக மாபெரும் சர்ச்சையில் சிக்கினார். இதனால் இவரது பெயரும், காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய அவப்பெயர் வந்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும் கண்டனங்களையும் எழுப்பிய இந்த சம்பவத்தின் எதிரொலியாக, அவர் வார காலத்திற்கு சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் இவருக்கும் காங்கிரஸுக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக காங்கிரஸில் இருந்து விலகி பிஜு ஜனதா தாள் கட்சியில் இணைந்தார். அங்கு சென்றபோதும் தொகுதியில் இருந்த இவரது செல்வாக்கு சற்றும் குறையவில்லை. மாறாக இவருக்கு செல்வாக்கு பெருகியதாகவே கருதலாம்.

மாணவர் சங்கம் TO அமைச்சர்.. ஆபாச பட சர்ச்சை.. கோடீஸ்வரர்.. இறுதியில் சுட்டு கொலை : யார் இந்த நபா தாஸ் ?

கடந்த 2019-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் பிஜு ஜனதா தல் கட்சி சார்பாக போட்டியிட்டார். சுமார் 98 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றார். இதன் மூலம் அவருக்கு தொகுதியில் மக்கள் செல்வாக்கு இருப்பது கண்டறிய முடிகிறது. நவீன் பட்நாயக் அமைச்சரவையிலும், ஒடிசா அரசியலிலும் செல்வாக்கு மிகந்த மூத்த தலைவராக திகழ்ந்தார். ஒடிசாவின் பணக்கார அமைச்சர்களில் ஒருவராகவும் இருந்தார்.

மாணவர் சங்கம் TO அமைச்சர்.. ஆபாச பட சர்ச்சை.. கோடீஸ்வரர்.. இறுதியில் சுட்டு கொலை : யார் இந்த நபா தாஸ் ?

நபா கிஷோர் தாஸ் - சொத்து :

நபா, சுமார் 145 கார்கள் சொந்தமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் 80 வாகனங்கள் சுமார் 24 கோடி ரூபாய் என்றும், அவர் வைத்திருக்கும் பென்ஸ் கார் 1.96 கோடி ரூபாய் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் சம்பல்பூர், புவனேஸ்வர், ஜார்சுகுடா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள வங்கிகளில் மொத்தமாக 45 லட்சம் ரூபாய் சேமித்து வைத்துள்ளார்.

இவருக்கு ரூ.92.3 லட்சத்தில் நிலங்களும், ரூ.89.2 லட்சத்தில் கட்டடங்களும் என சுமார் ரூ.1.81 கோடி அளவில் அசையும் சொத்துக்கள் உள்ளன. அதோடு அண்மையில் இவர் 1.17 கிலோ தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளியால் கட்டப்பட்ட மகாராஷ்டிராவின் ஷானி ஷிங்னாபூர் கோயிலுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கலசத்தை நன்கொடையாக வழங்கியது தேசிய ஊடகங்களில் பெரும் விவாத பொருளை கிளப்பியது.

மாணவர் சங்கம் TO அமைச்சர்.. ஆபாச பட சர்ச்சை.. கோடீஸ்வரர்.. இறுதியில் சுட்டு கொலை : யார் இந்த நபா தாஸ் ?

எனினும் தற்போது வரை இவர் கோடீஸ்வரர் அமைச்சர்களில் ஒருவராக மட்டுமில்லாமல், அவர் இருக்கும் தொகுதியில் மக்கள் செல்வாக்கு மிக்கவராக காணப்பட்டு வருகிறார். 4 முறை ஒரே தொகுதியில் நின்று, அதில் 3 முறை வெற்றி பெற்று, முதல் முறை அமைச்சராக பதவி வகித்தார் நபா தாஸ். இந்த நிலையில் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் ஆய்வாளரே அவரை சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் சங்கம் TO அமைச்சர்.. ஆபாச பட சர்ச்சை.. கோடீஸ்வரர்.. இறுதியில் சுட்டு கொலை : யார் இந்த நபா தாஸ் ?

மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு அரசியல் தலைவர் உயிரிழந்துள்ளது, பிஜு ஜனதா தல் கட்சிக்கு ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. இவரது மறைவு ஒடிசா அரசியலில் பெரும் இழப்பாகவே அரசியல் விமர்சகர்கள்கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உயிரிழந்த அமைச்சருக்கு வயது 61 என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு முக்கிய அரசியல் தலைவர்கள் பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

Related Stories