இந்தியா

65 ரோந்து பாயிண்டுகளில் 26-ஐ சீனாவிடம் இழந்த இந்தியா..விவாதிக்க மறுத்த மோடி.. வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

கிழக்கு லடாக்கில் மொத்தமுள்ள 65 ரோந்து பாயிண்டுகளில் 26 ரோந்து பாயிண்டுகளை சீனாவிடம் இந்தியா இழந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

 65 ரோந்து பாயிண்டுகளில் 26-ஐ சீனாவிடம் இழந்த இந்தியா..விவாதிக்க மறுத்த மோடி.. வெளிவந்த அதிர்ச்சி தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவின் எல்லைப்பகுதியைச் சீனா தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகிறது. இதனால் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே எப்போதும் பதட்டமான சூழ்நிலையே இருந்து வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதி அருகே உள்ள எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி ஊடுருவி வேலி அமைத்தாக கூறப்படுகிறது.

இதைப்பார்த்த இந்திய ராணுவ வீரர்கள், சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியைத் தடுத்துள்ளனர்.இதனால், இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 6 இந்திய வீரர்கள் காயமடைந்ததாகவும் சீன தரப்பில் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.

 65 ரோந்து பாயிண்டுகளில் 26-ஐ சீனாவிடம் இழந்த இந்தியா..விவாதிக்க மறுத்த மோடி.. வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

இந்த சம்பவத்தை அடுத்து நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினாலும் அதற்கு ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை. தொடர்ச்சியாக இந்திய எல்லையில் சீன ராணுவம் ஊடுருவும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. ஆனால் மோடி தலைமையிலான அரசாங்கம் அதை வேடிக்கை பார்த்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், கிழக்கு லடாக்கில் மொத்தமுள்ள 65 ரோந்து பாயிண்டுகளில் 26 ரோந்து பாயிண்டுகளை சீனாவிடம் இந்தியா இழந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் டிஜிபி மாநாடு நடந்தது. இதற்கு முன்பாக பாதுகாப்பு சவால்கள் குறித்து உயர் அதிகாரிகள் மட்டுமின்றி கீழ்நிலை அதிகாரிகளிடம் இருந்து தகவல்கள் அறிக்கைகளாக பெறப்பட்டன.

 65 ரோந்து பாயிண்டுகளில் 26-ஐ சீனாவிடம் இழந்த இந்தியா..விவாதிக்க மறுத்த மோடி.. வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

இந்த ஆய்வறிக்கையில், லடாக்கின் லே பகுதி எஸ்பி பிடி நித்யா என்பவர் தாக்கல் செய்துள்ள ஆய்வறிக்கையில் கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவம் வழக்கமாக ரோந்து செல்லும் இடங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது. காரகோரத்தில் இருந்து சுமூர் பகுதி வரை மொத்தம் 65 ரோந்து மையங்கள் உள்ளன. இதில் 26 (பிபி 5-17; 24-32; 37, 51, 52, 62) இடங்களை சீனா ஆக்கிமரித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அதிமுக்கியமான விவகாரம் தொடர்பாக டிஜிபி மாநாட்டில் எந்த வித உரையாடலும் நடைபெறவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories