இந்தியா

வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்.. பாஜக MP-யை விசாரிக்க மேரி கோம் தலைமையில் குழு அமைப்பு !

பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவவருமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீதான புகார் குறித்து விசாரிக்க ஒன்றிய விளையாட்டு துறை சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்.. பாஜக MP-யை விசாரிக்க மேரி கோம் தலைமையில் குழு அமைப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பாஜக சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார்.இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளை செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தோடு இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாக பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர் என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது.இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர். போராட்டம் தொடர்பாக பேசிய பஜ்ரங் புனியா "மல்யுத்த வீரர் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்துள்ளனர். ஆனால், இப்போது இந்திய மல்யுத்த கூட்டமைப்பு எடுக்கும் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எதிர்த்து நாங்கள் இனி அமைதியாக இருக்க மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம்.

வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்.. பாஜக MP-யை விசாரிக்க மேரி கோம் தலைமையில் குழு அமைப்பு !

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் அனைவரும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பால் எங்களை சிறப்பாக நடத்தும் வரை தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள்" என்றும் அறிவித்தார். பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதன் தொடர்ச்சியாக ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த போராட்டம் தோல்வியில் முடிந்த நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மல்யுத்த வீராங்கனைகள் சம்மதம் தெரிவித்தனர்.

வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார்.. பாஜக MP-யை விசாரிக்க மேரி கோம் தலைமையில் குழு அமைப்பு !

பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவவருமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீதான புகார் குறித்து விசாரிக்க ஒன்றிய விளையாட்டு துறை சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையிலான குழுவில், டோலா பேனர்ஜி, மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், சஹ்தேவ் யாதவ், அலாக்நந்தா அசோக், இரண்டு வழக்கறிஞர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இது குறித்து பேசிய ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், "இந்தக் குழு விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் என்றும், விசாரணை முடிவடையும் வரை இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் இருந்து பிரிஜ் பூஷண் ஷரண் சிங் விலகி இருப்பார் என்றும் கூறியுள்ளார். இதனால் இந்த விவகாரம் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories