இந்தியா

பிரம்மாண்டமாக முடிந்த நிச்சயதார்த்தம்: முகேஷ் அம்பானிக்கு சின்ன மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட்-யார் இவர்?

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் குறித்த தேடல் இணையத்தில் அதிகரித்துள்ளது.

பிரம்மாண்டமாக முடிந்த நிச்சயதார்த்தம்: முகேஷ் அம்பானிக்கு சின்ன மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட்-யார் இவர்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி. அவருடைய ரிலையன்ஸ் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு மோடி அரசு தொடர்ந்து சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.

இதனால் முகேஷ் அம்பானி அனைத்து தொழில்களிலும் லாபத்தை சம்பாதித்து இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். மேலும் ஆசியாவின் முதல் பணக்காரராகவும் உலகபணக்காரர் வரிசையிலும் இடம்பெற்றார். கொரோனா காலத்தில் உலகபணக்காரர்கள் எல்லாம் பாதிக்கப்பட்ட நிலையில், இவரும் மற்றொரு இந்திய தொழிலதிபருமான அதானியும் மட்டுமே பெரும் லாபம் ஈட்டினர்.

பிரம்மாண்டமாக முடிந்த நிச்சயதார்த்தம்: முகேஷ் அம்பானிக்கு சின்ன மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட்-யார் இவர்?

இந்த நிலையில், முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், விரேன் மெர்ச்சன்ட் - ஷைலா மெர்ச்சன்ட் தம்பதியின் மூத்த மகள் ராதிகா மெர்ச்சன்டுக்கும் கடந்த மாதம் (டிச.29) திருமண நிச்சயம் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராதிகா மெர்ச்சன்ட் குறித்த தேடல் இணையத்தில் அதிக அளவில் இடம்பெற்றது.

யார் இந்த ராதிகா மெர்ச்சன்ட் ?:

ராதிகா மெர்ச்சன்ட்டின் பெற்றோர்' ராதிகா மெர்ச்சன்ட் என்கோர் ஹெல்த்கேர்' நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். குஜராத்தில் பிறந்து மும்பையில் வளர்ந்தவரான ராதிகா பள்ளிப்படிப்பை மும்பையில் முடித்து அமெரிக்காவில் அரசியல் மற்றும் பொருளாதார படிப்பை முடித்துள்ளார்.

பிரம்மாண்டமாக முடிந்த நிச்சயதார்த்தம்: முகேஷ் அம்பானிக்கு சின்ன மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட்-யார் இவர்?

ஆடம்பர வீடு மனைகளை கட்டி விற்பனை செய்யும் கோத்ரேஜ் குழுமத்தின் இஸ்ப்ராவா நிறுவனத்தில் இணைந்து பணிசெய்த அவர், தற்போது 'என்கோர் ஹெல்த்கேர்' என்ற நிறுவனத்தின் இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் பல்வேறு ஆராய்ச்சி படைப்புகளிலும் அவர் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

சிறுவயது முதலே பரதநாட்டியத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், புகழ்பெற்ற கலைஞர் குரு பாவனா தக்கா என்பவரின் சீடராக நாட்டியம் கற்று தேர்ந்தவர். மேலும், பல்வேறு மேடைகளில் தனது அரங்கேற்றத்தையும் இவர் செய்து புகழ் பெற்றுள்ளார்.

ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் ஆனந்த் அம்பானி இருவரும் பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள் ஆவர். முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories