இந்தியா

கார்களில் கோளாறு.. 6 ரக கார்களை திரும்ப பெரும் மாருதி சுசூகி நிறுவனம்.. காரணம் என்ன ?

வாடிக்கையாளர்களின் குறைகளை பூர்த்திசெய்யும் விதமாக 6 ரக கார்களை மாருதி சுசூகி நிறுவனம் திரும்பபெறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்களில் கோளாறு.. 6 ரக கார்களை திரும்ப பெரும் மாருதி சுசூகி நிறுவனம்.. காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமாக உள்ள மாருதி சுசூகி நிறுவனம் புதிய மேம்பட்ட வசதிகளுடன் பிரபல பிரீஸா காரை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே அதில் சில கோளாறுகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

இது தவிர Alto K10, S-Presso, Eeco, Brezza, Baleno & Grand Vitara ஆகிய கார்களிலும் குறை இருப்பதாக புகார்கள் எழுந்தன. அதிலும் குறிப்பாக ஏர்பேக் கண்ட்ரோலரில் குறைபாடு இருப்பதாவதும், அது சரியாக வேலை செய்யவில்லை என்றும் கூறப்பட்டது.

கார்களில் கோளாறு.. 6 ரக கார்களை திரும்ப பெரும் மாருதி சுசூகி நிறுவனம்.. காரணம் என்ன ?

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் குறைகளை பூர்த்திசெய்யும் விதமாக டிச.8 - ஜன. 12 வரை தயாரிக்கப்பட்ட Alto K10, S-Presso, Eeco, Brezza, Baleno & Grand Vitara ஆகிய கார்கள் திரும்பபெறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த கார்களை மாருதி சுசூகி நிறுவனம் உரிமையாளர்களிடம் இருந்து பெற்று குறைபாடுகள் சரிசெய்து மீண்டும் அளிக்கப்படவுள்ளதாக முக்கிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு முன்னரும் மாருதி சுசூகி நிறுவனம் இதுபோல செய்துள்ளதால் இந்த முறை அதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories