இந்தியா

ஆபாச வீடியோ கால்.. போலிஸ், CBI அதிகாரி, நீதிபதி வேடத்தில் ரூ.2.69 கோடி பறிப்பு.. குஜராத்தில் அதிர்ச்சி !

ஆபாச வீடியோ கால் மூலம் தொழிலதிபரிடம் ரூ.2.69 கோடி பணத்தை மிரட்டிப் பறித்த கும்பலில் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச வீடியோ கால்.. போலிஸ், CBI அதிகாரி, நீதிபதி வேடத்தில் ரூ.2.69 கோடி பறிப்பு.. குஜராத்தில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு பெண் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் தான் மோர்பியைச் சேர்ந்த ரியா ஷர்மா என்று அறிமுகப்படுத்திய அந்த பெண் அந்த தொழிலதிபரிடம் நெருங்கி பழகியுள்ளார்.

பின்னர் ஒரு கட்டத்தில் அந்த தொழிலதிபருக்கு வீடியோ காலில் அழைத்த அந்த பெண் அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார். மேலும், தொழிலதிபரை நிர்வாணமாக இருக்க சொல்லி பேசிய அவர் தனது போனில் அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

ஆபாச வீடியோ கால்.. போலிஸ், CBI அதிகாரி, நீதிபதி வேடத்தில் ரூ.2.69 கோடி பறிப்பு.. குஜராத்தில் அதிர்ச்சி !

பின்னர் அந்த தொழிலதிபரிடம் பேசிய அந்த பெண், அவர் மட்டும் தனியாக இருக்கும் நிர்வாண வீடியோவை அனுப்பி உடனே ரூ.50.000 அனுப்ப வேண்டும் என தொழிலதிபரை மிரட்டி பணம் வாங்கியுள்ளார். இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பின்னர் இன்ஸ்பெக்டர் என ஒருவர் அந்த தொழிலதிபரை அழைத்து தொழிலதிபரின் வீடியோ தன்னிடம் இருப்பதாகக் கூறி ரூ.3 லட்சம் பறித்துள்ளார்.

பின்னர் அந்த பெண் புகார் அளித்ததாகவும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் போலீஸ் சைபர் செல் பணியாளர் என்று கூறி ஒருவர் தொழிலதிபரை மிரட்டி ரூ. 80.97 லட்சத்தை வாங்கியுள்ளார். அதோடு நிற்காத அந்த கும்பல், சிபிஐ அதிகாரி என அழைத்து அந்த பெண்ணின் தாயார் சிபிஐ-யிடம் புகார் அளித்ததாகவும் அதில் இருந்து வெளியே வரவேண்டும் என்றால் ரூ 8.5 லட்சம் தர வேண்டும் என்று கூறி அந்த தொகையையும் வங்கியுள்ளார்.

ஆபாச வீடியோ கால்.. போலிஸ், CBI அதிகாரி, நீதிபதி வேடத்தில் ரூ.2.69 கோடி பறிப்பு.. குஜராத்தில் அதிர்ச்சி !

பின்னர் வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றதாகவும், அதனை முடித்து தர குறிப்பிட்ட தொகை தரவேண்டும் என டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி போல பேசிய ஒருவர் தொழிலதிபரிடம் குறிப்பிட்ட தொகையை வாங்கியதோடு நீதிமன்ற உத்தரவு என ஒரு நகலையும் அனுப்பியுள்ளார்.

அந்த நகல் போலி என்பதை கண்டறிந்த அந்த தொழிலதிபர், சைபர் க்ரைம் பிரிவு காவல் நிலையத்தை அணுகி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறியுள்ளார். மேலும், மொத்தம் 11 பேர் ரூ.2.69 கோடியை மிரட்டிப் பறித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories