இந்தியா

கோவிலுக்குள் வந்த பட்டியலின பெண்.. தலைமுடியை பிடித்து வெளியே தள்ளிய பூசாரி.. பெங்களுருவில் அதிர்ச்சி !

சாமி கும்பிட வந்த பட்டியலின பெண்ணின் தலைமுடியை பிடித்து கோவிலில் இருந்து வெளியேற்றிய பூசாரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலுக்குள் வந்த பட்டியலின பெண்.. தலைமுடியை பிடித்து  வெளியே தள்ளிய பூசாரி.. பெங்களுருவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநிலம் பெங்களூரு அம்ருதஹள்ளி பகுதியில் லட்சுமி நாராயணா என்ற கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவர். இந்த நிலையில், இந்த கோவிலுக்கு கடந்த டிசம்பர் 12-ம் தேதி சாமி கும்பிட பட்டியலின பெண் ஒருவர் வந்துள்ளார்.

அப்போது அந்த கோவிலில் பூசாரியாக இருக்கும் முனிகிருஷ்ணா என்பவர் அந்த பெண்ணின் சாதி குறித்து அறிந்து நீங்கள் எல்லாம் இந்து கோவிலுக்குள் வரக்கூடாது என கூறி அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கோவிலுக்குள் வந்த பட்டியலின பெண்.. தலைமுடியை பிடித்து  வெளியே தள்ளிய பூசாரி.. பெங்களுருவில் அதிர்ச்சி !

இதில் ஆத்திரமடைந்த முனிகிருஷ்ணா அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து தரதரவென கோவிலில் இருந்து வெளியே இழுத்து வந்துள்ளார். மேலும், அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதன் பின்னர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து, முனி கிருஷ்ணாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories