இந்தியா

“சிதறிய மண்டை ஓடு.. மூளை காணவில்லை..” - டெல்லி இளம்பெண் கொலை விவகாரத்தில் வெளியான திக் திக் அறிக்கை !

“சிதறிய மண்டை ஓடு.. மூளை காணவில்லை..” - டெல்லி இளம்பெண் கொலை விவகாரத்தில் வெளியான திக் திக் அறிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 1-ம் தேதி நாடு முழுவதும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது டெல்லியில் உள்ள கஞ்சவாலா என்ற பகுதியில் நிர்வாண கோலத்தில் இளம்பெண் ஒருவர் காரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரை பிடித்து காரில் இருந்த 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

“சிதறிய மண்டை ஓடு.. மூளை காணவில்லை..” - டெல்லி இளம்பெண் கொலை விவகாரத்தில் வெளியான திக் திக் அறிக்கை !

தொடர்ந்து அந்த பெண் யார் என்ன என்று விசாரிக்கையில், அவர் பெயர் அஞ்சலி எனவும், வயது 20 எனவும் தெரியவந்தது. தொடர்ந்து இந்த விபத்து சுல்தான்பூரி என்ற இடத்தில் நிகழ்ந்திருக்கலாம் எனவும், சுமார் 12- 14 கி.மீ வரை அந்த பெண் காரில் இழுத்து செல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சுமார் 400-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், அஞ்சலியுடன் அவரது தோழி இருந்ததை கண்டறிந்தனர்.

மேலும் அஞ்சலி காரில் இழுத்து செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு காரில் இருந்த 5 நபர்களை விசாரிக்கையில், அந்த பெண் காருக்கு அடியில் சிக்கியிருந்தது தங்களுக்கு தெரியாது எனவும் கூறினர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தோழி  நிதி
தோழி நிதி

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு இந்த விவகாரத்தில் திடுக்கிடும் தகவலாக அவரது தோழி அதிர்ச்சி கலந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இது குறித்து அவரது தோழி நிதி கூறுகையில், ""விபத்து நடப்பதற்கு முன்பு அஞ்சலி குடித்திருந்தாள். இருப்பினும் அவள் இருசக்கர வாகனம் ஓட்டினார். பின்னர் நாங்கள் போய்க்கொண்டிருக்கையில் ஒரு கார் எங்கள் ஸ்கூட்டி மீது மோதியது.

அப்போது அஞ்சலி அதில் சிக்கியிருந்தார். நான் இதை கண்டதும் அந்த இடத்தில் இருந்து ஓடிவிட்டேன். மேலும் யாரிடமும் இதுகுறித்து தெரிவிக்கவில்லை. ஏனென்றால் நான் பயந்துவிட்டேன். அதோடு என் தோழி காரில் சிக்கியிருந்தது கார் ஓட்டி சென்றவர்களுக்கு நன்கு தெரியும்" என்றார்.

இவரது இந்த பேச்சு நாடு முழுவதும் இணையவாசிகளிடம் இருந்து கண்டனங்களை எழுப்பி வருகிறது. ஒரு தோழி விபத்தில் சிக்கியிருக்கும் அதனை தடுக்க அவர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை, மேலும் போலீசுக்கும் தகவல் கொடுக்கவில்லை என்று பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

“சிதறிய மண்டை ஓடு.. மூளை காணவில்லை..” - டெல்லி இளம்பெண் கொலை விவகாரத்தில் வெளியான திக் திக் அறிக்கை !

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் டெல்லி முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். மேலும் அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்திருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் உலாவி வரும் நிலையில், இதுகுறித்த உடற்கூறாய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

அதன்படி, பாதிக்கப்பட்ட அஞ்சலி என்ற பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் அவரது மூளைப் பொருள் காணவில்லை, மண்டை ஓடு திறந்திருந்தது, மார்பின் பின்புறத்திலிருந்து விலா எலும்புகள் வெளிப்பட்டன, முதுகுத்தண்டு உடைந்தன மற்றும் அவரது உடல் முழுவதும் குறைந்தது 40 காயங்கள் இருந்தன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சிதறிய மண்டை ஓடு.. மூளை காணவில்லை..” - டெல்லி இளம்பெண் கொலை விவகாரத்தில் வெளியான திக் திக் அறிக்கை !

இதுகுறித்து உடற்கூறாய்வு நடத்திய மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மருத்துவர்களைக் கொண்ட குழு கூறுகையில், “தலை, முதுகுத்தண்டு, இடது தொடை எலும்பு மற்றும் இரண்டு கீழ் மூட்டுகளில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக ரத்தக்கசிவுதான் மரணத்திற்கு தற்காலிகக் காரணம். அஞ்சலியின் உடல் பரிசோதனையில், அவரது உச்சந்தலை சிதைந்து, ஒழுங்கற்ற முறையில் தொங்கி, சேறு மற்றும் அழுக்கு படிந்துள்ளது.

மேலும் அவரது மண்டை ஓடு குழி திறந்திருந்தது, அவரது மூளையின் சில பாகங்கள் இன்னும் தெரியவரவில்லை. தலை, முதுகு தண்டு, தொடை, கை, கால்கள் ஆகியவற்றில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிராய்ப்புகள் காரணமாக மார்பு விலா எலும்புகள் தேய்ந்துள்ளது. மண்டை ஓட்டின் அடிப்பகுதியின் எலும்பு முறிவு இருந்தது. இரண்டு நுரையீரல்களின் நுரையீரல் உறைக்குழி வெளிப்பாட்டுடன் திறந்திருந்தது” என்றனர்.

Related Stories

Related Stories