இந்தியா

“பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது” : நாடாளுமன்றத்தில் பிடிவாதமாக பதில் சொன்ன ஒன்றிய பா.ஜ.க அரசு!

“ பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மறுக்கும் செயல், ஒன்றிய அரசின் அராஜகப் போக்கையே காட்டுகிறது! நல்ல அரசுக்கு அழகல்ல இது!” எனறு ‘தினகரன்' நாளிதழ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது” : நாடாளுமன்றத்தில் பிடிவாதமாக பதில் சொன்ன ஒன்றிய பா.ஜ.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் – பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மறுக்கும் செயல், ஒன்றிய அரசின் அராஜகப் போக்கையே காட்டுகிறது! நல்ல அரசுக்கு அழகல்ல இது!” என்று ‘தினகரன்' நாளிதழ், தனது தலையங்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

‘பிடிவாத அறிவிப்பு' எனும் தலைப்பில், 'தினகரன்' நாளிதழ் நேற்றைய தலையங்கம் வருமாறு: -

இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் முதல் பெட்ரோலிய விலை நிர்ணயத்தை பெட்ரோலிய நிறுவனங்களின் கைகளுக்கு மாற்றியதுடன் இனி தினசரி கச்சா எண்ணெய் விலை ஏற்ற, இறக்க சூழலுக்கு ஏற்ப பெட்ரோல் விலையிலும் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும் என அப்போதைய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்படாமல் சிறிது, சிறிதாகவே உயர்த்தப்படும் என்றும், கச்சா எண்ணெய் விலை குறையும்போது அதற்கேற்ப விலை குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.

“பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது” : நாடாளுமன்றத்தில் பிடிவாதமாக பதில் சொன்ன ஒன்றிய பா.ஜ.க அரசு!

அப்போதைய காலக்கட்டத்தில் கச்சா எண்ணெய் விலை சராசரியாக பீப்பாய்க்கு 60 டாலர்கள் என்ற அளவில் இருந்தது. அதில் பெரிய மாற்றங்கள் இல்லாததால், பெட்ரோல், டீசல் விலை ஏற்றமும் மக்களை பெரிதும் பாதிக்காத வகையில் இருந்தது. பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் கச்சா எண்ணெய் விலை இதைவிட குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உயர்த்திக்கொண்டே சென்றார்கள்.

அதேபோல், கொரோனா ஊரடங்கு காலத்தில் கச்சா எண்ணெய் விலை அடிமட்டத்துக்கு சென்றபோதும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. கொரோனாவுக்கு பின்னரும்கூட கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை.

“பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது” : நாடாளுமன்றத்தில் பிடிவாதமாக பதில் சொன்ன ஒன்றிய பா.ஜ.க அரசு!

இது குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும்போதெல்லாம், ‘‘இது எண்ணெய் நிறுவனங்கள் எடுக்கும் முடிவு என ஒன்றிய அரசு கூறி வருகிறது. எண்ணெய் நிறுவனங்களை கேட்டால், ‘‘இதையெல்லாம் பெட்ரோலிய அமைச்சகத்திடம்தான் கேட்கவேண்டும்’’ என்று கூறுகின்றன. இந்தியாவில் எப்போதெல்லாம் மாநில தேர்தல்கள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலை சிறிது நாட்களுக்கோ, சில மாதங்களுக்கோ மாற்றமில்லாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் குஜராத், இமாச்சலப்பிரதேச தேர்தலுக்கு முன்பாக, ஆறு மாத காலத்துக்கு விலையில் மாற்றமில்லாமல் பார்த்துக்கொண்டார்கள். இதையெல்லாம் கவனிக்கும்போது, இந்த விலை ஏற்ற, இறக்கங்களில் பெட்ரோலிய அமைச்சகமே அரசுக்கு சாதகமாக விலை ஏற்ற, இறக்கத்தை நிர்ணயிப்பதாக அறிய முடிகிறது. தற்போது இரு மாநில தேர்தல்களும் முடிவடைந்துள்ள நிலையில், இனி பெட்ரோல், டீசல் விலையேற்றம் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

“பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது” : நாடாளுமன்றத்தில் பிடிவாதமாக பதில் சொன்ன ஒன்றிய பா.ஜ.க அரசு!

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. முரளிதரன், ‘‘கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளபோதும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?’’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங், “2014-ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் குறைந்த அளவில்தான் உள்ளது. 1974-ம் ஆண்டுகளை ஒப்பிடும்போது, கடைசி 8 ஆண்டுகளில் விலையேற்றம் என்பது மிக குறைவுதான். அதனால், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது’’ என திட்டவட்டமாகவும், பிடிவாதமாகவும் கூறிவிட்டார்.

இந்த அறிவிப்புக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவையில் இருந்து வெளியேறின. பொதுவாக எல்லா நாடுகளிலும், கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். இந்தியாவில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் இந்த நடைமுறைதான் அமலில் இருந்தது. ஆனால், தற்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என ஒன்றிய அமைச்சர் அதிரடியாக அறிவித்திருப்பது, நுகர்வோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. கடைகோடி சாமானிய மக்களும் பாதிக்காத வகையில் செயல்படுவதே நல்ல ஆட்சிக்கு அழகு.

banner

Related Stories

Related Stories