இந்தியா

திருடியதாக சந்தேகம்.. லாரி முன் இளைஞரை கட்டிவைத்து 1.5 கி.மீ தூரம் ஓட்டிய DRIVER.. பஞ்சாபில் அதிர்ச்சி!

திருடியதாக இளைஞர் ஒருவரை லாரியின் முன் கட்டிவைத்து சுமார் 1.5 கி.மீ தூரம் லாரியை இயக்கிய ஓட்டுனரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருடியதாக சந்தேகம்.. லாரி முன் இளைஞரை கட்டிவைத்து 1.5 கி.மீ தூரம் ஓட்டிய DRIVER.. பஞ்சாபில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பஞ்சாப் மாநிலத்தின் முக்த்சார் என்ற இடத்தில் கோதுமை ஏற்றிவந்த லாரி ஒன்று சரக்குகளை இறக்க நின்றுள்ளது. அப்போது லாரில் இரண்டு மூட்டை குறைவாக இருப்பது ஓட்டுனருக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக அவர் அங்கிருந்த ஒருவரின் இது குறித்து கேட்டுள்ளார்.

அப்போது அந்த விலகினர் இரண்டு கோதுமை மூட்டைகளை திருடி சென்றதாகவும் அதனை தான் பார்த்ததாகவும் அந்த நபர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் அந்த நபரை பிடித்து தாக்கியுள்ளார். மேலும், அங்கிருந்தவர்களை அழைத்து அந்த நபரை தாக்கி துன்புறுத்தியுள்ளார்.

திருடியதாக சந்தேகம்.. லாரி முன் இளைஞரை கட்டிவைத்து 1.5 கி.மீ தூரம் ஓட்டிய DRIVER.. பஞ்சாபில் அதிர்ச்சி!

இதனைத் தொடர்ந்து, அந்த நபரின் கை, கால்களை கயிறால் கட்டிய அந்த ஓட்டுநர் தனது லாரியின் முன்னர் அவரை கட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து சுமார் 1.5 கி.மீ தூரம் முன்பகுதியில் கட்டப்பட்ட நிலையில் லாரியை இயக்கியுள்ளார்.

பின்னர் அங்கிருந்த காவல்நிலையத்தில் அந்த நபரை ஓட்டுநர் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது போலிஸார் திருட்டு வழக்கு பதிவு செய்தனர். ஆனால், இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

திருடியதாக சந்தேகம்.. லாரி முன் இளைஞரை கட்டிவைத்து 1.5 கி.மீ தூரம் ஓட்டிய DRIVER.. பஞ்சாபில் அதிர்ச்சி!

அதன் பின்னரே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும், அந்த வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளதால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories