இந்தியா

பிரபல பெண் Youtuber அதிரடி கைது.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மையால் ரசிகர்கள் அதிர்ச்சி!

வாலிபரை மிரட்டி பணம் பறிந்த பிரபல பெண் யூடியூபரை போலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பெண் Youtuber அதிரடி கைது.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மையால் ரசிகர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியைச் சேர்ந்தவர் இளம் பெண் நம்ரா காதிர். இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது சேனலக்கு 6 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்கள் உள்ளனர். இவரது கணவர் விராட் பெனிவால்.

இந்நிலையில் தினேஷ் யாதவ் என்பவர் தனது நிறுவனத்திற்கு விளம்பரம் செய்து கொடுக்கும்படி நம்ரா கதிரை சந்தித்துள்ளார். அப்போது விளம்பரம் செய்து கொடுக்க ரூ.2 லட்சம் வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பிரபல பெண் Youtuber அதிரடி கைது.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மையால் ரசிகர்கள் அதிர்ச்சி!

இதையடுத்து தினேஷ் பணத்தைக் கொடுத்துள்ளார். பிறகு மீண்டும் ரூ.50 லட்சம் கேட்டுள்ளார். இதையும் அவர் கொடுத்துள்ளார். பிறகு தன்னை விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்ளவதாகவும் தினேஷிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் தினேஷை கிளம் ஒன்றிற்கு நம்ரா வரச்சொல்லியுள்ளார். அங்கு அறையில் பேங்க் அக்கவுண், ஏடிஎம் கார்டு உள்ளிட்ட அனைத்தையும் கொடுக்கும் படி கேட்டுள்ளார். இதைத் தரவில்லை என்றால் வன்கொடுமை செய்ததாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

பிரபல பெண் Youtuber அதிரடி கைது.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மையால் ரசிகர்கள் அதிர்ச்சி!

இதனால் பயந்துபோன தினேஷ் மீண்டும் பணத்தைக் கொடுத்துள்ளார். பிறகு தினேஷ் தனது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 5 லட்சம் பணத்தை எடுத்தபோதே அவரது பெற்றோர்களுக்கு நடந்த விஷயங்கள் தெரியவந்துள்ளது.

இதையடுத்து தினேஷ் பெற்றோர் யூடியூபர் நம்ரா காதிர் மீது புகார் அளித்துள்ளனர். இந்த புகாரையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரித்தபோது தினேஷிடம் மிரட்டி ரூ.80 லட்சம்வரை பணம் வாங்கியது தெரியவந்துள்ளது. மேலும் இவர் தினேஷ் போன்று வேறு யாரிடமாவது ஏமாற்றி பணத்தை மோசடி செய்து பறித்துள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories