இந்தியா

காதலனுக்காக கணவரை கொலை செய்த மனைவி.. ஒரு வருடத்துக்கு பின்னர் வெளிவந்த உண்மை.. ராஜஸ்தானில் அதிர்ச்சி !

காதலனுக்காக கணவரை கொலை செய்து கல்லை கட்டி கால்வாயில் தூக்கி எறிந்துள்ள மனைவியின் செயல் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலனுக்காக கணவரை கொலை செய்த மனைவி.. ஒரு வருடத்துக்கு பின்னர் வெளிவந்த உண்மை.. ராஜஸ்தானில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

காதலனுக்காக கணவரை கொலை செய்து கல்லை கட்டி கால்வாயில் தூக்கி எறிந்துள்ள மனைவியின் செயல் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியை அடுத்துள்ளது சிக்சானா. இங்கு வசித்து வருபவர் பவன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரீமா என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இவர்கள் வீட்டிற்கு அருகில் பகேந்திரா என்பவர் வசித்து வந்துள்ளார்.

இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மேலும் கணவர் சில நாட்கள் வெளியூருக்கு வேலைக்கு சென்றபோதெல்லாம், இருவரும் சந்தித்து வந்துள்ளனர். இவர்கள் நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், கடந்தாண்டு மே மாதம் கணவர் இல்லாத நேரத்தில் ரீமா, தனது காதலனை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

காதலனுக்காக கணவரை கொலை செய்த மனைவி.. ஒரு வருடத்துக்கு பின்னர் வெளிவந்த உண்மை.. ராஜஸ்தானில் அதிர்ச்சி !

அப்போது எதிர்ப்பாராத விதமாக கணவர் வர, இருவரும் நெருக்கமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பகேந்திராவை ரீமாவின் கணவர் தாக்கி, இருவரையும் கண்டித்துள்ளார். அப்போது இவர்களுக்குள் நடந்த தகராறில் ரீமாவும், அவரது காதலனும் சேர்ந்து பவனை கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.

பின்னர் அவரது உடலை அகற்ற பகேந்திரா, தனது நண்பரான தீப்த் என்பவரை அழைத்துள்ளார். இதையடுத்து பவனின் உடலை அனைவரும் சேர்ந்து ஒரு சாக்குமூட்டையில் கட்டி கொண்டு சென்றனர். அப்போது சாக்குமூட்டையை கல்லால் கட்டி கால்வாய்க்குள் போட்டுவிட்டனர். பின்னர் அனைவரும் எதுவும் தெரியாதது போல் இருந்துள்ளனர்.

காதலனுக்காக கணவரை கொலை செய்த மனைவி.. ஒரு வருடத்துக்கு பின்னர் வெளிவந்த உண்மை.. ராஜஸ்தானில் அதிர்ச்சி !

பின்னர் பவனை குறித்து அவரது பெற்றோர் விசாரிக்கையில் தனக்கு எதுவும் தெரியாது என்று நாடகமாடியுள்ளார் ரீமா. பின்னர் தனது மகளை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார் பவனின் தந்தை. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பல கோணங்களில் விசாரணை மேற்கொண்ட நிலையில், ஒரு ஆண்டு கழித்து தற்போது பவன் காணாமல் போன வழக்கில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதும், அதற்கு காரணம் அவரது மனைவி என்றும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

காதலனுக்காக கணவரை கொலை செய்த மனைவி.. ஒரு வருடத்துக்கு பின்னர் வெளிவந்த உண்மை.. ராஜஸ்தானில் அதிர்ச்சி !

இதையடுத்து ரீமா, அவரது காதலன் பாகேந்திரா, ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து தற்போது அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக இருக்கும் அவரது நண்பர் தீப்தை தீவிரமாக தேடி வருகின்றனர். காதலனுக்காக கணவரை கொலை செய்து கல்லை கட்டி கால்வாயில் தூக்கி எறிந்துள்ள மனைவியின் செயல் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories