இந்தியா

அதிவேகத்தில் வந்த கார்.. சாலை விபத்தில் பெண் பத்திரிகையாளருக்கு நேர்ந்த சோகம் !

ஈ.டி.வி பாரத் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஊடகவியலாளரான நிவேதிதா சூரஜ் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிவேகத்தில் வந்த கார்.. சாலை விபத்தில் பெண் பத்திரிகையாளருக்கு நேர்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஈ.டி.வி பாரத் தொலைக்காட்சியில் துணை ஆசிரியராக ஹைதராபாத்தில் பணியாற்றிவருபவர் நிவேதிதா சூரஜ் (வயது 26). இவர் நேற்று தனது நண்பர் சோனாலி சாவ்ரே என்பவருடன் அதிகாலை 5 மணியளவில் அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது தனது அலுவலகப் பேருந்து ஏறும் இடத்திற்குச் செல்வதற்காக சாலையைக் கடந்தபோது வேகமாக வந்த கார் இவர்கள் இருவர் மீதும் மோதியுள்ளது. நிவேதிதா காற்றில் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் சோனாலி சாவ்ரே படுகாயமடைந்துள்ளார்.

அதிவேகத்தில் வந்த கார்.. சாலை விபத்தில் பெண் பத்திரிகையாளருக்கு நேர்ந்த சோகம் !

இந்த கொடூர விபத்து ஹைதராபாத்தின் பாக்யலதா பகுதியில் உள்ள ஹயாத் நகரில் நடந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய கார் எங்கும் நில்லாமல் வேகமாக சென்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலிஸார் கார் ஓட்டுநர் தொடர்பாக சிசிடிசி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சோனாலி சாவ்ரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிவேதிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் திருச்சூரில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories