இந்தியா

"இதை நீங்கள் செய்துதான் பாருங்களேன்".. ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு சவால் விட்ட நாராயணசாமி !

பா.ஜ.கவின் ஏஜென்டாகவே மாறிவிட்டார் தமிழக ஆளுநர் ஆளுநர் ரவி என புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

"இதை நீங்கள் செய்துதான் பாருங்களேன்".. ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு சவால் விட்ட நாராயணசாமி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆளுநர்கள் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். அல்லது பதவியை ராஜினாமா செய்துவிட வேண்டும் என புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, "புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தைச் சரியாகப் படிக்க வேண்டும்

"இதை நீங்கள் செய்துதான் பாருங்களேன்".. ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு சவால் விட்ட நாராயணசாமி !

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு எடுக்கும் முடிவுகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு என கூறுவதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.

தெலுங்கானாவில் மக்களைச் சந்திப்பதாகச் சொல்லும் தமிழிசை சௌந்தரராஜன், எப்போது மக்களைச் சந்திக்கிறாரோ சொல்லட்டும். நான் அப்போது தெலுங்கான செல்கிறேன். நான் ஆளுநர் மாளிகையில் அவர் மக்களிடம் குறை கேட்பதைப் பார்க்க வேண்டும். அதை அவர் ஏற்றுக்கொள்வாரா? அப்படி அவர் ஆளுநர் மாளிகையில் மக்களைச் சந்தித்தால் அங்குள்ள ஆளும் கட்சியால் அவர் விரட்டி அடிக்கப்படுவார்.

"இதை நீங்கள் செய்துதான் பாருங்களேன்".. ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு சவால் விட்ட நாராயணசாமி !

ஆளுநர்கள் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்ய வேண்டும். புதுச்சேரியில் இரட்டை ஆட்சி நடைபெறுகிறது. ரங்கசாமி முதலமைச்சராகவும் அவர் போட்டுள்ள சட்டை பா.ஜ.க-விற்குச் சொந்தமானது. பா.ஜ.க-விற்கு ரங்கசாமி அடிமையாகிவிட்டார்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories